குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சைக்கு இடையில் தற்போது அடுத்த தொகுப்பாளருக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

CWC next anchor

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் ‘குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாகத் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை விலகி இருந்தார்.

தற்போது இவருக்கு பதிலாக, அந்த நிகழ்ச்சியில் புதிய தொகுப்பாளராக வேறொருவரை நியமிக்க உள்ளதாக விஜய் டிவி ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. கடத்த சில நாட்களாக இணையத்தில் பெரிதும் பேசப்படும் ஒரு விஷயம் என்றால் அது பிரியங்கா மற்றும் மணிமேகலை விவகாரம் தான்.

குக் வித் கோமாளி மற்ற சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பை விட இந்த 5-வது சீசனுக்கு சற்று வரவேற்பு குறைவாகவே கிடைத்தது. இப்படி இருக்கையில் தான் மணிமேகலை – பிரியங்கா இடையேயான சர்ச்சை பெரும் பேசும் பொருளாக மாறி, இந்த நிகழ்ச்சியின் TRP-யை ஏற்றி இருக்கிறது.

இவர்களுக்கு இடையேயான பிரச்சினை இதுவரை தீரா விட்டாலும், விஜய் டிவி பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என அனைவரும் இந்த ஒரு விஷயத்தை மட்டுமே திரும்ப திரும்ப பேசி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரியங்கா மீது பலரும் வெறுப்பை காட்ட தொடங்கினார்கள்.

மேலும்,பிரியங்காவிற்கு ஆதரவாக சில பிரபலங்கள் குரல் கொடுத்தாலும், மக்களுக்கு மத்தியில் இருந்த நல்ல அபிப்ராயம் கெட்டு விட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி சேனல் புதிய ப்ரமோ ஒன்றை தற்போது வெளியிட்டிருக்கிறது. அதில், இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஒரு ஆங்கரை களமிறக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

அந்த ப்ரோமோ வீடியோவில் அந்த புதிய தொகுப்பாளர் யார் என்ற விவரம் தெரிவிக்கவில்லை. ஆனால், அதில் வரும் பின்னணி குரலில், அவர் நமக்கு தெரிந்தவராகவும் இருக்கலாம், தெரியாதவராகவும் இருக்கலாம், என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, அந்த தொலைக்காட்சியில் ஏற்கனவே இருக்கும் ஒரு ஆங்கராக இவர் இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், ஒரு சிலர் அது டிடி-யாக இருக்கலாம் எனவும் மற்றும் சிலர் புதிய ஆளாக இருக்கலாம் எனவும் கூறி வருகின்றனர். அந்த புதிய தொகுப்பாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள நாம் சற்று பொறுமையாகவே இருக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்