“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!
எனக்கு மக்கள் கொண்டாட கூடிய கமர்ஷியல் படம் தான் வேண்டும் என இயக்குனர் T. J. ஞானவேலுக்கு ரஜினிகாந்த் கண்டிஷன் போட்டுள்ளார்.
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார். அதில் முக்கிய விஷயமாக படத்தின் இயக்குநர் T. J. ஞானவேல் பற்றி பாராட்டி பேசியிருந்தார். அதனைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் ” தன்னுடைய மகள் சௌந்தர்யாவிடம் இயக்குனர் T. J. ஞானவேல் ஒன் லைன் ஒன்றை சொன்னார். நான் இயக்குனரிடம் சொன்னனேன் நமக்கு மெசேஜ் சொல்வதெல்லாம் செட் ஆகாது. மக்களுக்கு பிடித்த படி, கமர்ஷியல் படம் தான் வேண்டும் ” என இயக்குநருக்கு ரஜினிகாந்த் கண்டிஷன் போட்டுள்ளார்.
ரஜினி சொன்னதை கேட்டுவிட்டு 10 நாட்கள் நேரம் கேட்டு அதற்கு பிறகு 2 நாட்களில் கால் செய்து T. J. ஞானவேல் பேசியுள்ளார். அப்போது பேசும்போது, நான் கமர்ஷியல் படம் செய்கிறேன்..ஆனால், இயக்குநர்கள் நெல்சன், லோகேஷ் அவர்களை போல் இல்லாமல் ரசிகர்கள் உங்களை வேறுவிதமாக பார்க்கும் வகையில், காட்டுகிறேன் என கூறியுள்ளார். . அப்போது, அதுதான் எனக்கு வேண்டும்” எனவும் ரஜினி கூறியுள்ளார்.
அப்படி வேண்டும் என்றால் நான் நெல்சன், லோகேஷ் அவர்களிடமே சென்றிருப்பேன் என்றேன்” என கூறியதாகவும் ரஜினிகாந்த் விழாவின் மேடையில் தெரிவித்துள்ளார். நெல்சன், லோகேஷ் ஆகியோர் எந்த அளவுக்கு தரமான கமர்ஷியல் படங்களை கொடுத்து வருகிறார்கள் என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அவர்களை விட வித்தியாசமாக ரஜினியை காட்டி காட்டி கமர்ஷியல் படத்தை கொடுப்பதாக ஞானவேல் கூறியிருப்பது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
அத்துடன், T. J. ஞானவேல் கடைசியாக ஜெய்பீம் படத்தினை இயக்கி இருந்தார். அந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு விமர்சன ரீதியாக பெரிய வெற்றியை கண்டது. எனவே, அந்த வெற்றியை, தொடர்ந்து அவர் ரஜினியை வைத்து இயக்கியுள்ள வேட்டையன் படமும் கருத்து சொல்லும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் முழுக்க முழுக்க மக்களுக்கான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.