சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர்.

muthu,meena (17) (1)

சென்னை –சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர்.

சிட்டியை வெறுக்கும் சத்யா ;

முத்துவும் மீனாவும் பூ கொடுக்க போறாங்க.. போற வழியில ரெண்டு பேரும் அந்த செருப்பு தைக்கிற தாத்தா பாட்டியை பார்க்க போறாங்க.. என்ன ரெண்டு பேரும் சேர்ந்து வந்து இருக்கீங்க அப்படின்னு கேக்குறாங்க.. இவர் தான் தாத்தா என்னோட வீட்டுக்காரர் அப்படின்னு சொல்லவும் ஏன் அன்னைக்கே சொல்லல.. அதுக்கு மீனா சொல்றாங்க நீங்க பாராட்டுன சந்தோஷத்துல நான் சொல்ல மறந்துட்டேன்.. இப்போ அந்த தாத்தா  மீனாவுக்கு திருநீர் குடுக்குறாங்க..  மீனா நைட்டு கனவுல வந்து  அழுதுகிட்டே இருந்த அதான் மனசு சரியில்ல கோயிலுக்கு போயிட்டு வந்தேன் .. உங்கள எப்படி நான் பார்க்கிறதுன்னு தெரியாம இருந்தேன் நல்ல வேலை நீங்களே வந்துட்டீங்க அப்படின்னு சொல்றாங்க.

மீனா அதைக்கேட்டு சோகமாயிடுறாங்க.. அதுக்கு முத்து  சொல்றாரு என்ன மீனா நிஜத்துல நினைக்கிறது  நடக்க மாட்டேங்குது  இதுல கனவுல வரதெல்லாம் நடக்குமா அப்படின்னு சொல்லி  சமாதானப்படுத்துறாரு.. இப்ப ரெண்டு பேரும் சந்தோஷமா பேசிக்கிட்டே பைக்ல போறாங்க..  சத்யா பிரண்டு கூட நின்னு  டீ குடிச்சிட்டு இருக்காரு ..அப்போ சிட்டி பாக்குறாரு . சிட்டி கூட இருந்த பிரண்டு கிட்ட சத்யாவோட டீ காசு கொடுத்துட்டு வா அப்படின்னு சொல்லி அனுப்பி வைக்கிறார். இப்போ சத்தியா டீ  பில்லு கட்ட போறப்போ சிட்டியோட பிரண்டு கொடுக்கப் போறாரு. அத பாத்து சத்யா என்ன சிங்கிள் டீக்கு கூட வழி  இருக்காதுன்னு சிட்டி கொடுத்துட்டு வர சொன்னானா தேவையில்லாம என்னோட வழியில வரவேண்டாம்னு சொல்லு .. இதைக்கேட்ட சிட்டிக்கு கோவம் வருது..

muthu,meena (16) (1)

முத்து மீனா மீது மோத வரும் கார் ;

உடனே   ரோகினிக்கு கால் பண்ணி நான் சொன்னது என்ன ஆச்சுன்னு கேட்க அதுக்கு ரோகிணி சொல்றாங்க முத்து  போனா அவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடியாது .. கொஞ்சம் டைம் கூடுன்னு கேக்குறாங்க.. அதுக்கு சிட்டி நீ எவ்வளவு சீக்கிரமா பண்றியோ அப்பதான் உனக்கு நல்லது அப்படின்னு சொல்லிட்டு போன வச்சிடுறாரு . மீனாவும் முத்துவும்   டீ குடிக்கிறதுக்கு போறாங்க ..அத சிட்டி பாத்துடுறாரு .. என் மேல கை வச்சவங்கள  சும்மா விட கூடாது ரெண்டு பேரையும் அடிச்சு தூக்கணும் அப்படின்னு சொல்லிட்டு முத்து  மீனாவை ஃபாலோ பண்ணிட்டே போறாங்க.. இப்போ முத்து மீனாவும் சந்தோசமா பேசிட்டே போறாங்க. நீங்க இருக்கும் போது எனக்கு எதுவுமே ஆகாதுங்க அப்படியே ஆனாலும் உங்க கைய புடிச்சுக்கிட்டே என் உயிரை விட்டாலும் எனக்கு சந்தோசம் தான் அப்படின்னு மீனா சொல்றாங்க.

அதுக்கு முத்து நான் இருக்கும் போது அப்படியெல்லாம் ஆக விற்றுவனா அப்படின்னு கேக்குறாரு ..அந்த டைம்ல கார் வேகமாக மோத வர்ற மாதிரி வருது சுதாரிச்ச முத்து வண்டிய ஓரமா நிப்பாட்டுறாரு.. அந்த காரு நிக்காம வேகமா போயிருது.. எப்படி குடிச்சிட்டு ஓட்டுறாங்க பாரு நீ இங்கே இரு மீனா நான் வரேன் அப்படின்னு சொல்லிட்டு அந்த கார ஃபாலோ பண்ண கிளம்புறாரு  அதுக்கு மீனா தடுத்துறாங்க.. அவங்க தான் போய்ட்டுல்ல விடுங்க அப்படின்னு சொல்றாங்க.. இப்போ ரெண்டு பேரும் வீட்ல போயி கணக்கு வழக்கெல்லாம் பாக்குறாங்க. அதுல 3 ஆயிரம் ரூபாய் லாபம் வந்திருக்கு.  சரி இதை நம்ம சேமிச்சு வச்சர்லான்னு மீனா சொல்ல என்ன மீனா எப்ப பார்த்தாலும் சேமிப்பு சேமிப்பு னு சொல்ற ஏதாவது ஜாலியா வெளியில போயிட்டு வரலாம். இல்லங்க நம்ம ரூம் கட்டணம் அதுதான் இப்ப முக்கியம் அப்படின்னு மீனா சொல்றாங்க.அதுக்கு முத்து அதுவும் முக்கியம்தான் அதோட அப்பப்போ ஜாலியா இருக்கிறது முக்கியம்ல அப்படின்னு சொல்றாரு.

sathya (1)

 

முத்துவின் செல்லை திருடும் ரோகினி ;

அதெல்லாம் ஒன்னும் வேண்டாமே அப்படின்னு மீனா சொல்லிடறாங்க .இப்ப முத்து கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட சுதந்திரமே போச்சு அப்படின்னு சொல்றாங்க. உடனே மீனா  அப்படி என்னங்க சுதந்திரம் போச்சு எங்க சொல்லு.. கல்யாணத்துக்கு முன்னாடி லேட்டா வந்தா என்னைய கேட்க கூட ஆள் இல்ல பிரண்ட்ஸ் கூட ஜாலியா சுத்திட்டு வருவேன்.. புடிச்சத சாப்பிடுவேன் அப்படின்னு  லிஸ்ட் போட்டு சொல்றாரு. உடனே மீனா சொல்றாங்க நீங்க ஏன் சுதந்திரம் போச்சுன்னு நினைக்கிறீங்க  கல்யாணத்துக்கு அப்புறம் பொறுப்பு வந்துருச்சுன்னு நினைச்சுக்கோங்க அப்படின்னு சொல்றாங்க. அதுவும் சரிதான் இதோட இன்னைக்கு எபிசோட முடிச்சிருக்காங்க. நாளைக்கு  ப்ரோமோல முத்து பெட்லயே செல்ல வெச்சிட்டு போறாங்க ரோகினி கழுகு மாதிரி எப்படா அந்த செல்ல தூக்கலாம்னு  பாத்துட்டு இருகாங்க ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்