“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

துணை முதல்வர் கேள்விக்கு ரஜினி பதிலளித்தது தொடர்பாக, நேற்று, யூ-டியூப்களில் வெளியான தலைப்புகளை பார்த்து நான் பயந்துவிட்டேன். - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Actor Rajinikanth - Minister Udhayanidhi

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல் வட்டாரம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. இது குறித்த கேள்விகளும் ஆங்காங்கே பல்வேறு பிரமுகர்கள் மத்தியில் எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு ஆதரவாகவும், விமர்சனம் தரும் வகையிலும் பதில்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்திடம் , ‘உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.?’ என செய்தியார்கள் கேட்கையில் ரஜினிகாந்த், “என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என்று நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்” என அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து நேற்று சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், ” நான் எனது போனில் யூ-டியூப் பார்த்தேன். அதன் தலைப்புகளை பார்த்து பயந்துவிட்டேன். ‘உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவாரா.? ரஜினி ஆவேசம்’ என வைத்துள்ளனர். துணைமுதல்வர் பற்றிய அறிவிப்பே இன்னும் வரவில்லை. அதற்கான முழு அதிகாரமும் முதலமைச்சரிடம் தான் உள்ளது.

துணை முதல்வர் பற்றி, என்னிடமும், முதலமைச்சரிடமும் கேட்கிறீர்கள் சரி. ரோட்டில் போற எல்லாரிடத்திலும் துணை முதல்வர் பதவி பற்றி கேட்கிறீர்கள். அவர் (ரஜினிகாந்த்) ஷூட்டிங்கிற்காக ஏர்போர்ட் வந்துள்ளார். அவர் ஏற்கனவே , தன்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள் என கூறிவிட்டார். அவரிடம் இந்த கேள்வியை நீங்கள் (செய்தியாளர்கள்) கேட்கிறீர்கள்.

இப்போது நான் பேசியதற்கு கூட என்ன தலைப்பு வைக்க போகிறார்களோ தெரியவில்லை. நானே கூறுகிறேன், ‘அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலடி’ என வைத்துக்கொள்ளுங்கள்.” என்று ரஜினிகாந்த் கருத்து குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்