INDvsBAN : “இந்த பிளையிங் லெவன்ஸை எதிர்பாக்கல”! தடுமாறி விளையாடி வரும் இந்திய அணி!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் தொடரானது தற்போது தொடங்கியுள்ளது.

IND vs Ban

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி இருக்கிறது. அதன்படி, இன்று இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான சுற்றுப் பயணத்தொடர் இன்று தொடங்கி இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது தொடங்கியுள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட்களும் இன்று காலை 7 மணி முதல் விற்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. அதே நேரம் ரோஹித் ஷர்மாவும் டாஸ் வென்றால் பந்து வீச்சை தான் தேர்வு செய்திருப்போம் என அவர் கூறினார்.

வங்கதேச அணியின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த சர்ப்ரைசாக அமைந்துள்ளது என்றே கூறலாம். அதற்கு மிகமுக்கிய காரணம் சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் தான். சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் என்றாலே அது ஸ்பின்னருக்கான பிட்ச். அதனால், நேரமாக சுழல் பந்து வீச்சுக்கு கைகொடுக்கும்.

இந்த நிலையில், அடுத்த சர்ப்ரைஸாக இந்திய அணியின் பிளையிங் லெவனும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இரண்டு வேகபந்து வீச்சாளர்களை அணியில் வைத்து மீதம் உள்ள பவுலர்களை ஸ்பின்னராக அணியில் எடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், சர்ப்ரைஸாக பும்ரா, ஆகாஷ் தீப், சிராஜ் என 3 வேகபந்து வீச்சாளர்களை எடுத்துள்ளனர். ஆனாலும், ஜடேஜா, சுழல் ஜாம்பவானான அஸ்வின் அணியில் இருப்பதனால் ஸ்பின் பவுலிங் அட்டாக்கிற்கு பஞ்சம் இருக்காது என்றே கூறலாம்.

அதே நேரம் இந்திய அணியின் பேட்டிங்கை பார்க்கையில் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது. இருந்தாலும், ரோஹித் சர்மா, கில் மற்றும் விராட் கோலி மூவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளனர். வங்கதேச அணியில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருக்கிறார்.

இதனால், இந்திய அணி 10 ஓவர்களில் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது. பல மாதங்களுக்கு பிறகு ரோஹித் மற்றும் கோலி டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார்கள். இதனால் , ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது ரசிகரக்ளுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

விளையாடும் பங்களாதேஷ் வீரர்கள் :

ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா

விளையாடும் இந்திய வீரர்கள் :

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்