மீண்டும் வாத்தியாராக விமல்.! கல்வி பற்றி பேசும் ‘சார்’ ட்ரெய்லர்.!

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

SIR Trailer

சென்னை : நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. SSS பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்தின் வெளியீட்டு பொறுப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியும் இணைந்துள்ளது.

ட்ரெய்லரில் விமல், புதிதாக ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இருப்பினும், அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், யாரும் கல்வி கற்காமல் இருக்க திட்டமிடுகின்றனர்.

அதனை மீட்டெடுக்கும் விமல், “நான் சொல்லி கொடுக்கணும்ன்னு இங்க தைரியமா வந்து நிக்கிறது, உங்கள மாத்துறதுக்கு இல்ல… உங்க சந்ததிய மாத்துறதுக்கு” என்று வசனம் பேசியுள்ளார். மதவாதம், சாதிவெறி மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராக கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசும் இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

விமல் ஆசிரியராக நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும், முன்னதாக அவர் நடித்த முதல் படம்  ‘வாகை சூட வா’ தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. சார் படத்தில் விமல் தவிர, சாயாதேவி கண்ணன், சிராஜ் எஸ், சரவணன், ராமா மற்றும் ஜெயபாலன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்