மகாளய பட்சம் 2024- மகாளய பட்சம் ஏன் கடைபிடிக்க வேண்டும் ?அதன் சிறப்புகள் பற்றி தெரியுமா?
காருண்ய தர்ப்பணம் என்று சொல்லப்படும் நாம் வளர்த்து மறைந்த செல்ல பிராணிகள் மற்றும் மறைந்த நாம் நண்பர்களை நினைத்தும் தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறப்பாக சாத்திரத்தில் கூறப்படுகிறது.
சென்னை -மகாளய பட்சத்தின் சிறப்புகள் மற்றும் கட்டாயம் யார் கடைபிடிக்க வேண்டும் என்பதை இந்த செய்திக் குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மகாளய பட்ச காலம் ;
நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களையே பித்ருக்கள் என்கிறோம் . நம் முன்னோர்கள் பித்ருலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்து நம்மை ஆசிர்வதிக்கும் நாளே மகாளய பட்சம் ஆகும் . ஒவ்வொரு வருடமும் 14 நாட்கள் அனுசரிக்கப்படும் மகாளய பட்சம் இந்த வருடம் நாளை செப்டம்பர் 18 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடைகிறது.
புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாட்டை போல் பித்ருக்கள் வழிபாட்டயும் வழிபட வேண்டும்.நம் முன்னோர்கள் தங்கள் சுற்றத்தார்கள் ,குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க அனுமதிக்கப்படும் காலம் தான் மகாளய பட்சம் . அவ்வாறு நம்மை காண வருபவர்களை நினைத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இதை செய்யும் போது முன்னோர்களின் ஆன்மா குளிர்ந்து அதை ஏற்று ஆசிர்வதிப்பார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களின் கோபத்திற்கு ஆளாகி சாபமாக மாறும் இதுவே முன்னோர்களின் சாபம் என்றும் பித்ரு தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
முன்னோர்கள் சாபம் இருப்பதை எவ்வாறு அறிவது?
வாழ்க்கையில் முன்னேற்றம் இன்மை, எடுத்த காரியம் தடைபட்டுக் கொண்டே செல்வது ,திருமண தடை, குழந்தை பேரில் தடை, குடும்பத்தில் சண்டை சச்சரவு, பிரிவு போன்றவை முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் சாபத்திற்கு உள்ளாவதாகும்.
பித்ருக்களின் சாபம் யாருக்கெல்லாம் வரும்?
எவர் ஒருவர் முன்னோர்களின் வயதான காலத்தில் கவனிக்காமல் விட்டு உதவாதவர்களுக்கும், முன்னோர்களின் குல தர்மத்தை கடைபிடிக்காமல் இருப்பவர்களுக்கும், உடன் பிறந்தவர்களை கவனிக்காமல் விடுவது, முன்னோர்களுக்கு முறையாக திதி கொடுக்காமல் இருப்பது, அகால மரணம் அடைந்த ஆத்மாக்களுக்கு சாந்தி கர்மா கடைப்பிடிக்காமல் இருப்பது, பிரேத சடங்குகளை செய்யாமல் இருப்பவர்களுக்கும் இந்த பித்ரு சாபம் ஏற்படுகிறது.
அதனால் நம்மிடம் வாழ்ந்து இறந்த நம் முன்னோர்களுக்கு கட்டாயம் அவர்களை நினைவில் கொண்டு வருடம் ஒரு முறையாவது திதி கொடுக்க வேண்டும் அப்படி ஒருவேளை கொடுக்காவிட்டாலும் இந்த மகாலய பட்ச காலத்தை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் மறைந்தவர்களுக்கு மஹாலய பட்சம் என்றும் மகாலய காலம் மகத்தான காலம் என்றும் கூறுவார்கள்.
மகாளய பட்சத்தின் சிறப்பு;
மகாபாரதத்தில் கர்ணன் இறந்த பிறகு மேலோகத்திற்கு செல்கிறார். அப்போது அவர் முதலில் நரகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். கர்ணன் எவ்வளவோ தான தர்மம் செய்தவர். தற்போது வரை தான தர்மத்திற்கு உதாரணமாக கூறப்படுபவரும் கர்ணனே. அவர் நரகத்திற்குச் செல்லும் போது அவர் செய்த தான தர்மத்தை நினைத்து பார்க்கிறார்.. தான் ஏன் நரகத்திற்குச் செல்கிறோம் என்பதை அறிய எமதர்மராஜாவிடம் கேட்கிறார்.
அதற்கு எமதர்மராஜா கர்ணனை பார்த்து நீ எவ்வளவோ தானம் செய்திருந்தாலும் உன் முன்னோர்களுக்கு பிண்ட தர்ப்பணம் செய்யவே இல்லை அதனால்தான் உனக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை இதற்கு பரிகாரமாக மீண்டும் 15 நாட்கள் பூமிக்குச் சென்று உன் முன்னோர்களுக்கு பித்ரு கடனை செய்து வா என கூறியுள்ளார் .கர்ணனும் அதே போல் பித்ரு கடனை செலுத்தி விட்டு வருகிறார்.. பிறகு சொர்க்க லோகத்தில் இடம் கிடைத்திருக்கிறது என புராணங்கள் கூறுகிறது. இப்படி கர்ணன் தர்ப்பணம் செய்த 15 நாட்கள் மாளய பட்ச காலம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அதனால் நம்முடன் வாழ்ந்து இறந்த நம் முன்னோர்களுக்கு கட்டாயம் அவர்களை நினைவில் கொண்டு வருடம் ஒரு முறையாவது திதி கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காவிட்டாலும் இந்த மகாளய பட்ச காலத்தை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் .மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் என்றும் மகாளய காலம் மகத்தான காலம் என்றும் கூறுவார்கள்.
அதோடு காருண்ய தர்ப்பணம் என்று சொல்லப்படும் நாம் வளர்த்து மறைந்த செல்ல பிராணிகள் மற்றும் மறைந்த நாம் நண்பர்களை நினைத்தும் தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறப்பாக சாத்திரத்தில் கூறப்படுகிறது.வாழ்வில் வறுமை ஒழிந்து முன்னேற்றம் பெற முன்னோர்களுக்குரிய இந்த மகாளய பட்ச காலத்தை நாம் அனைவரும் பின்பற்றுவோம்.