பெரியார் சிலைக்கு நேரில் முதல் மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய்!
சென்னை திடலில் உள்ள பெரியார் சிலைக்கு, தவெக தலைவர் விஜய் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை : எழும்பூர் அருகே வேப்பேரி பகுதியில் உள்ள பெரியார் திடல் சென்று தன்னை ஒரு முழு அரசியல்வாதி என நிரூபித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். ஆம், கட்சி அறிவிப்புக்கு பின் முதல்முறையாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு விஜய் தனது காரில் ஏறி செல்வதற்கு முன், திமுக ஆதரவாளர், பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பொதுவெளியில் தலைவர் ஒருவரின் சிலைக்கு விஜய் மரியாதை செய்திருப்பது இதுவே முதல்முறை ஆகும்.
முன்னதாக, தலைவர்கள் சிலைக்கு இதுவரை தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#JustNow | பெரியார் சிலைக்கு தவெக தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் மரியாதை!
| @actorvijay | @tvkvijayhq | #Periyar146 | #PeriyarBirthday | #TVKVijay | #TVK | #Vijay | #ITamilNews @V_F_C_Madesh pic.twitter.com/VaWI1qb9ey
— Thalapthy Vikram (@JILLAVIKRAM1527) September 17, 2024
வேறு எந்த தலைவர்கள் சிலைக்கும் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தாத விஜய், முதல்முறையாக பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இது அவரது அரிசியலின் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
இதை வைத்து பார்க்கும் பொழுது, தமிழ் தேசியத்தை கையில் எடுத்த சீமானும், மைய அரசியல் பற்றி பேசிய கமல்ஹாசனும் ஒரு இடத்திற்கு மேல் நகர முடியாமல் தேங்கியதை பார்த்து, விஜய் பாடம் கற்றுக் கொண்டதாகவே தெரிகிறது.
தமிழகத்தில் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுக்க, திராவிட சித்தாந்தமே சிறந்த வழி என்பதே அவர் கற்றுக்கொண்ட முதல் அரசியல் பாடமாக இருக்குமோ? என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு முன்னதாக, தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். சாதி, மத ஆதிக்கம், மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர் பெரியார் என்று நினைவுகூர்ந்தார்.
பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ் என்று போற்றப்பட்ட அவரது பிறந்தநாளில், சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்றும் வலியுறுத்தினார்.
— TVK Vijay (@tvkvijayhq) September 17, 2024