டெல்லி முதல்வராக அதிஷி மார்லெனா தேர்வு! எம்.எல்.ஏ கூட்டத்தில் தீர்மானம்!
நடைபெற்ற கூட்டத்தில் டெல்லியின் புதிய மாநில முதல்வராக அதிஷி மார்லெனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி : டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்யவுள்ளார். இதனால், டெல்லியின் புதிய முதல்வராக மூத்த கல்வி அமைச்சர் அதிஷி மார்லெனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெல்லியில் தற்போது நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிஷி மார்லெனா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும், ஜாமீன் வழங்கினாலும், டெல்லி முதல்வர் பதவியை தொடர முடியாத அளவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் அவருக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் முதல்வர் பதவியை செப்-17ம் தேதி அன்று ராஜினாமா செய்ய போவதாக அறிவித்தார்.
இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இப்படி இருக்கையில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கல்வி துறை அமைச்சாரான அதிஷியை அடுத்த டெல்லி முதல்வராக பரிந்துரை செய்திருந்தார் என தகவல்கள் வெளியானது.
அதன்படி, இன்று காலை அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், டெல்லி மாநிலத்தின் புதிய முதலைமைச்சராக மூத்த அமைச்சரும் கல்வி துறை அமைச்சருமான அதிஷி மார்லெனா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு துணை நிலை ஆளுநரை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் வழங்குவார். மேலும், அங்கு சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்த கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு புதிய முதல்வர் அதிஷி மார்லெனா தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.