நீங்க எப்படி ஆங்கர் ஆனீங்க? மணிமேகலை மீது வன்மத்தை கக்கிய பிரியங்கா!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நீங்க எப்படி ஆங்கர் ஆனீங்க? என மணிமேகலையை பார்த்து பிரியங்கா சூசகமாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை தான் சின்னத்திரையில், பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. நிகழ்ச்சியில் குக் ஆக விளையாடாமல் பலமுறை ஆங்கரிங் வேலையை செய்து மணிமேகலையை அவருடைய வேலையை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.
பலமுறை நிகச்சியில் பார்க்கும்போது, கூட மணிமேகலையை ரொம்பவே வேதனைப்படும் வகையில், பிரியங்கா காலாய்ப்பதை பார்த்திருப்போம். நிகழ்ச்சியோடு பார்க்கும்போது அது பெரிய அளவில் தெரியவில்லை என்றால் கூட மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருப்பதை வைத்து தெரிகிறது.
எனவே, இதன் காரணமாக இதுவரை பொறுமையாக இருந்த மணிமேகலை தனக்கு பணம் காசு விட தன்மானம் தான் முக்கியம் என கூறி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்திருந்தார். வேதனையுடன் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து மணிமேகலைக்கு ரசிகர்கள் ஆதரவு கூறி அதற்கு காரணமாக அமைந்த பிரியங்காவை கடுமையாக திட்டி வருகிறார்கள்.
இந்த சூழலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதற்கு முன்னதாக நடந்த எபிசோட்களில் மணிமேகலை மீது பொறாமைப்பட்டு பிரியங்கா பேசிய வீடியோக்களும் வைராகி கொண்டு இருக்கிறது. இப்போது வைரலாகி வரும் வீடியோவில் ” குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நடிகை பிரியங்கா மோகன் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார்.
அப்போது மணிமேகலையை பார்த்து அவர் “நீங்க எப்போ ஆங்கர் ஆனீங்க? என நகைச்சுவையாக கேட்டார். அதற்கு இன்ப அதிர்ச்சியுடன் மணிமேகலை அவரை பார்க்க, நிகழ்ச்சியில் இருந்த ரக்சன் ” நீ எல்லாம் எப்படி ஆங்கர் ஆன என்று கேட்க பிரியங்கா மோகன் அப்படி கேட்டுவிட்டார்” என கூறினார்.
இதனை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பிரியங்கா ” சரியாக சொன்னீங்க பிரியங்கா என்று பெயர் வைத்த அனைவர்க்கும் மணிமேகலை எப்படி ஆங்கர் ஆனார் என்ற கேள்வி தோணுவது போல் முகத்தை பொறாமைப்படுவது போல வைத்து கூறினார். இந்த வீடியோ எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுவது போல வைரலாகி வரும் நிலையில், பலரும் பிரியங்கா வன்மத்தை கக்குகிறார் என கூறிவருகிறார்கள்.