பைடன் – கமலாவை கொலை செய்ய யாரும் முயற்சிக்கவில்லை! – எலான் மஸ்க்
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 2-வது முறையாக துப்பாக்கி சூடு முயற்சி குறித்து எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் மீது நேற்று இரண்டாவது முறையாக துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த சம்பவமே அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தொழிலதிபரான எலான் மஸ்க் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு தற்போது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டொனால்ட் டிரம்ப் மீது ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால், அதில் அவரது வலதுகாதில் மட்டும் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று மீண்டும் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதலில் அவருக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தை கண்டித்து, எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் “டொனால்ட் டிரம்பை ஏன் கொள்ள முயற்சி செய்கிறார்கள்” என கேள்வி எழுப்பி இருந்தார். அதை பகிர்ந்த எலான் மஸ்க் ஒரு பதிவு பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், “கமலா ஹாரிஸ், ஜோ பைடன் ஆகிய இருவரையும் படுகொலை செய்ய யாரும் முயற்சி கூட செய்யவில்லை” என அந்த பயனரின் பதிவை பகிர்ந்து எலான் மஸ்க் பதிவிட்டிருந்தார்.
எலான் மஸ்கின் இந்த பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடைபெற போகும் இந்த அமெரிக்க தேர்தலில் குடியரசு வேட்பாளராக போட்டியிடும் ட்ரம்பிற்கு எலான் மஸ்க் ஆதரவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றால் அவரது அமைச்சரவையில் நானும் இருப்பேன் எனவும் எலான் மஸ்க் சமீபத்தில் தெரிவித்திருந்தார். எலான் மஸ்க் அவரது ஆதரவை இது போன்ற ட்வீட் மூலமாகவும் அவ்வப்போது தெரிவித்து வருகிறார்.
And no one is even trying to assassinate Biden/Kamala 🤔 https://t.co/ANQJj4hNgW
— Elon Musk (@elonmusk) September 16, 2024