இந்து மதத்திற்கு எதிராக சட்ட வரைவு ..!!விரைவில் அமல்….??
ஆடு, சேவல் போன்றவற்றை பலியிடும் பழக்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் சிலோன் இந்து மகாசபை என்ற அமைப்பு முன்னர் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கவுனவட்டே நரசிம்மர் ஆலயத்தில் ஆடு, சேவல் போன்ற விலங்குகளை பலியிடும் பழக்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் சிலோன் இந்து மகாசபை என்ற அமைப்பு முன்னர் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் கோயில்களில் உயிரினங்களை பலியிடும் பழக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், இலங்கையில் நாடு முழுவதும் உள்ள இந்து கோயில்களில் இத்தகைய பழக்கத்துக்கு தடை விதிக்கும் சட்ட முன்வரைவு ஒன்றை அந்நாட்டின் இந்து மத விவகாரங்கள் துறை மந்திரி டி.எம். சாமிநாதன் முன்மொழிந்திருந்தார்.
அந்த முன்மொழிவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான மந்திரிசபை இன்று வழிமொழிந்துள்ளது.இந்நிலையில் இந்த சட்ட முன்வரைவு சட்டத்துறை அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். பின்னர், இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் மூலம் அரசின் அறிவிக்கையாக வெளியாகி, பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டமாக அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU