ஓணம் சத்யா ஸ்பெஷல் பருப்பு கறி செய்வது எப்படி.?
ஓணம் சத்யா ஸ்பெஷல் பருப்பு கறி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை –ஓணம் சத்யா ஸ்பெஷல் பருப்பு கறி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்;
- பாசிப்பருப்பு= ஒரு கப்
- சின்ன வெங்காயம்= 10
- பச்சை மிளகாய்= 4
- மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்= இரண்டு ஸ்பூன்
- தேங்காய் துருவல்= அரை கப் ஸ்பூன்
- சீரகம் =அரை ஸ்பூன்
- பூண்டு= 4 பள்ளு
- வரமிளகாய்= 2
- நெய்= ஒரு ஸ்பூன்
- கடுகு =ஒரு ஸ்பூன்.
செய்முறை;
முதலில் பாசிப்பருப்பை வறுத்து கழுவி குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்,பிறகு அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டு, மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். இப்போது மிக்ஸியில் தேங்காய் துருவல், சீரகம் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும் .
பிறகு வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கொண்டு அரைத்த விழுதையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது இந்த பருப்பை சூடேறும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கி விடவும் ,பருப்பு கொதிக்க கூடாது .ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி கடுகு ,வரமிளகாய் சேர்த்து தாளித்து பருப்பில் கலந்து விட்டால் ஓணம் ஸ்பெஷல் பருப்புக்கறி தயாராகிவிடும்.