சம்பளத்திலே சாதனை படைத்த விஜய்! தளபதி 69 படத்துக்கு எத்தனை கோடிகள் தெரியுமா?

தளபதி 69 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் விஜய் பெறக்கூடிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

thalapathy 69

சென்னை : விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. முன்னதாக, கடைசியாக ஒரு படத்தில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக விஜய் அறிவித்தார்.

தற்போது, விஜய்யின் கடைசி படத்தை எச்.வினோத் இயக்குவது உறுதியாகி உள்ளது. இது விஜய்க்கு 69-வது படம். இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் விவரம் மற்றும் இந்த படத்தில் விஜய் பெறக்கூடிய சம்பளம் விவரங்கள் தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வருகின்றன.

இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் இறுதியில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் திருப்போரூர் பகுதிகளில் படப்பிடிப் புக்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ‘தளபதி 69’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. அதற்கு முன்பே, எதிர்பார்ப்பு அதிமாக உள்ளது.

விஜய்யின் சம்பளம்

விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன், நடிக்கும் கடைசி படமான ‘தளபதி 69’ படத்திற்காக ரூ.275 கோடி சம்பளம் பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர் என்ற உச்சத்தை தொட்டிருக்கிறார்.  தமிழ் சினிமாவில் இதுவரை யாருமே இந்த சம்பளம் வாங்கியதில்லை.  முன்னதாக, ‘தி கோட்’ படத்தில் ரூ.200 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்

இதில் சிம்ரன், மலையாள இளம் நடிகை மமிதா பைஜு ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் மோகன்லாலையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக மலையாள இணைய தளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜில்லா படத்தில் விஜய் தந்தையாக மோகன்லால் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்