விஜய்க்கு கதை சொன்ன சசிகுமார்! கடைசி நேரத்தில் நின்று போன காரணம் ?
2015-ஆம் ஆண்டு விஜய்க்கு வரலாற்று கதை ஒன்றை சொன்னதாக சசிகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என்ற ஆசையோடு பல இயக்குனர்கள், அவரிடம் கதை சொல்லி இருக்கிறார்கள். ஒரு சில கதைகள் விஜய்யை பெரிய அளவில் கவரவில்லை என்றால் கூட ஒரு சில கதைகள் பிடித்துப்போய் அந்த படங்கள் ஆரம்பம் ஆகும்போது சில காரணங்கள் நின்றுவிடும். அப்படி பல படங்கள் இருக்கிறது.
அப்படி தான், சுப்ரமணியபுரம் எனும் தரமான திரைப்படத்தை இயக்கிய சசிகுமார் ஒரு முறை விஜய்யை சந்தித்து ஒரு கதை ஒன்றை கூறி அந்த படம் எடுக்கமுடியாமல் போய்யுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு தான் சசிகுமாருக்கு விஜய்யை வைத்து ஒரு பிரமாண்ட படத்தினை எடுக்க யோசனை வந்ததாம். எனவே, ஒரு கதையை தயார் செய்துவிட்டு விஜய்யை சந்தித்து கூறினாராம்.
சசிகுமார் சொன்ன கதை விஜய்க்கு ரொம்பவே பிடித்து இருந்ததாம். அது மட்டுமின்றி, தமிழ் சினிமாவையே வியந்து பார்க்க வைத்த சுப்ரமணியபுரம் படம் எடுத்த அவருடைய இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் எனவும் விஜய் திட்டமிட்டாராம். சசிகுமார் சொன்ன அந்த கதை வரலாற்றுக் கதை கொண்ட படம் என்பதால் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படவிருந்தது.
இதன் காரணமாக விஜய் தனக்கு நெருங்கிய தயாரிப்பாளர் ஒருவரையும் பரிந்துரை செய்து அவரிடம் இந்த கதையை சொல்லவும் செய்தாராம். ஆனால் அதிக பட்ஜெட் மற்றும் VFX காட்சிகள் அதிகமாக இருந்ததன் காரணமாக அந்த படம் அப்படியே பிறகு பேச்சுவார்த்தையுடன் நின்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை சசிகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் ஒரு வேலை இந்த படம் நடந்திருந்தால் கண்டிப்பாக வேற லெவலில் இருந்திருக்கும் என கூறி வருகிறார்கள்.