அதிவேகமாக சென்ற லாரி….கார் பைக் மீது மோதி 4 பேர் பலி!
திருப்பதி அருகே அதிவேகமாக சென்ற லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி : மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் லாரி ஒன்று தக்காளிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, சந்திரகிரி – திருப்பதி இடையே உள்ள பாக்கராப்பேட்டை மலை பாதையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சம்பவத்தில் லாரி கார் மீது மோதியதால் கார் நொறுங்கவும் செய்தது. இதன் காரணமாக, காரில் இருந்த 4 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து லாரிக்கு அடியில் சிக்கிய ஒருவர் தனது கைகளை அசைத்து உதவி செய்யும் படி கேட்டுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் வேகமாக அந்த நபரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு அவர்களுடைய உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையையும் தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக, லாரி தக்காளி லோடு ஏற்றி கொண்டு மிகவும் அதிவேகத்தில் சென்றதே விபத்திற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025