தெறிக்கவிட்ட ‘GOAT’ மெட்ரோ ஃபைட் ! டூப் போடாமல் நடித்த விஜய்!!
GOAT படத்தில் வரும் மெட்ரோ சண்டைக்காட்சியில் விஜய் டூப் போடாமல் நடித்துள்ளதாக படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்புராயன் கூறியுள்ளார்.

சென்னை : விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் எதை பாராட்டலாம் என ரசிகர்கள் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளையும் பாராட்டி வருகிறார்கள். அதில் பலரும் பாராட்டிய காட்சிகளில் ஒன்று என்றால் மெட்ரோ சண்டைக்காட்சி என்றே சொல்லலாம். இந்த காட்சியில் இரண்டு விஜய் கதாபாத்திரம் சண்டைபோட்டுக்கொள்ளும் காட்சி திரையரங்குகளில் பார்க்கும்போது விருந்தாக அமைந்தது என்றே சொல்லலாம்.
இந்த காட்சியில் ஹெல்மெட் போட்டுகொண்டு விஜயின் ஒரு கதாபாத்திரம் சண்டைபோடுவது போல காட்சி இடம்பெற்று இருக்கும். அதனை பார்த்த பலரும் அந்த காட்சியில் ஒரு கதாபாத்திரம் மட்டும் தான் விஜய் உண்மையாக நடித்தார் மற்றோரு கதாபாத்திரம் டூப் போட்டு எடுத்துக்கொண்டது என நினைத்திருப்பார்கள். ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல் தான் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அது என்னவென்றால், அந்த காட்சியில் இரண்டு கதாபாத்திரங்களும் டூப் போடாமலே விஜய் தான் நடித்தாராம். படத்தின் சண்டை இயக்குனர் திலீப் சுப்பராயன் டூப் போட்டுக்கொள்ளலாம் என கூறியும் விஜய் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம். மறுப்பு தெரிவித்து நான் தான் இரண்டு கதாபாத்திரத்திலும் நடிப்பேன் என்று கூறினாராம்.
இருப்பினும், திலீப் சுப்பராயன் “அண்ணன் நீங்க ஹெல்மெட் போட்டுட்டு பண்ணா நீங்கதான்னு தெரியாதுனு சொன்னேன் முடியாது நான்தான் பண்ணுவேன்னு விஜய் நடித்தாராம். இந்த தகவலை திலீப் சுப்பராயன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் மெட்ரோ ஃபைட் தளபதியே பண்ணாரா? என வியந்து கேட்டு வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025