வெயிலை தணிக்க வரும் மழை.. வானிலை ஆய்வு மையம் புதிய தகவல்.!
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 42% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை : வெயில் காலம் முடிந்த பிறகும் தமிழகத்தில் வெயில் தாக்கம் குறைந்த மாதியே இல்லை. அதிகபட்ச வெப்பநிலை மதுரையில் 39.4 செல்சியஸ், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.0° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் தற்போது வெயில் கொளுத்தி வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இருந்தாலும், தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.