சைக்கோவாக மிரட்டிய விஜய்! ஜீவன் கதாபாத்திரத்தின் முதல் லுக் பாத்தீங்களா?

ஜீவன் கதாபாத்திரத்தில் முதல் முதலாக எடுக்கப்பட்ட லுக் டெஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

vijay jeevan look

சென்னை : GOAT படத்தில் ஜீவன் என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய விஜயை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். படம் வெளியாவதற்கு, முன்பு அந்த கதாபாத்திரத்திற்கான லுக்கை பலரும் விமர்சனம் செய்து வந்த நிலையில், படம் வெளியான பிறகு அனைவரும் அந்த கதாபாத்திரத்தை பார்த்து தான் பாராட்டவும் செய்தார்கள் என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு விமர்சனங்கள் அனைத்திற்கும் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பின் மூலம் விஜய் பதிலடி கொடுத்தார். படத்தின் ஸ்பார்க் பாடல் வெளியாகும் போது ஜீவன் கதாபாத்திரத்திற்கான கன்னம் ரொம்பவே ஒட்டி இருப்பதாகவும், விமர்சனங்கள் எழுந்த காரணத்தால் அதனை கொஞ்சம் மெருகேற்றி  வேறு மாதிரி வெங்கட் பிரபு மாற்றியிருந்தார்.

இதனால் படம் பார்க்கும்பது அது நெகட்டிவாகவும் தெரியவில்லை என்றே சொல்லலாம்.இந்த சூழலில், படத்தில் ஜீவன் கதாபாத்திரத்திற்கு முதன் முதலாக வைத்திருந்த லுக் பற்றிய விவரத்தை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அந்த லுக்கிற்கான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த பலரும் இந்த லுக்கில் அவரை வைத்து எடுத்து இருக்கலாம் என கூறி வருகிறார்கள்.

இந்த கதாபாத்திரத்திற்கான லுக்கை எடுக்கும்போது இன்னும் நீளமான முடியுடன் எடுக்க திட்டமிடப்பட்டிருந்ததாம். ஆனால், விக் வைத்தபோது விஜய்க்கு அது பிடிக்கவில்லை என்பதால் அவரே வெங்கட் பிரபுவிடம் பேசி நான் ஒரு ஸ்டைல் வைத்து வருகிறேன் என்று கூறினாராம். விஜய் வைத்து வந்த அந்த ஸ்டைல் மிகவும் நன்றாக இருந்ததால் அதனையே படத்தில் பயன்படுத்திவிட்டார்களாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்