புரட்டாசியில் குழந்தை பிறந்தால் குடும்பத்தை புரட்டி எடுக்குமாம்..! இது உண்மையா? மூடநம்பிக்கையா.?

இறைவன் படைத்த ஒவ்வொரு படைப்புகளுமே மிக உயர்ந்தவை தான். அதில் குழந்தை வரம் என்பது ஒவ்வொரு குடும்பங்களின் ஏக்கமாக உள்ளது .

baby (1)

சென்னை –புரட்டாசியில் குழந்தை பிறந்தால் வாழ்க்கையை  புரட்டி எடுக்கும் என்று பலரும் கூறுவதுண்டு  . இதனால் பலருக்கும் மனதில் ஒரு சஞ்சலம் இருக்கும்.  குறிப்பாக புரட்டாசியில் பிரசவிக்கும் பெண்களுக்கு ஒரு பயம் இருக்கும் .உங்கள் சந்தேகத்தை போக்கும் வகையில்  இந்த பதிவு அமைந்திருக்கும்.

புரட்டாசியின் சிறப்புகள் ;

முதலில் புரட்டாசியின் மகத்துவத்தை தெரிந்து கொள்வோம், புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் திருப்பதி ஏழுமலையான் அவதரித்தார். மேலும் சூரிய பகவான் கன்னி ராசியில் சஞ்சரிக்க கூடிய மாதம் ஆகும் .புதன் கிரகத்தின் ஆளுமை கொண்ட மாதமாகவும் விளங்குகிறது. புதன் பகவான் புத்திக்கும் கல்விக்கும் அதிபதியாக விளங்குபவர்.

கலைகளில் ஒருவர் சிறந்து விளங்குகிறார் என்றால் அவரது ஜாதகத்தில் புதனின்  அம்சம் வலிமை பெற்றிருக்க வேண்டும், இப்படி கலைகளில் சிறந்து விளங்கும்   புதன் பகவானின் வலிமை பெற்ற மாதமாக கூறப்படுகிறது.  வள்ளலார் மற்றும் ராமலிங்க அடிகளார் போன்ற ஞானிகள் அவதாரம் நிகழ்ந்த மாதமும் புரட்டாசியில் தான்.

இப்படிப்பட்ட இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தை புத்திசாலியாகவும் கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய குழந்தையாகவும் இருக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் மகாவிஷ்ணுவின் ஆசியும் மகாலட்சுமியும் அருளும் இருப்பதால் செல்வ செழிப்புடன் வாழக்கூடிய யோகம் பெற்ற குழந்தையாக விளங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் புரட்டாசியில் பிறந்த குழந்தையின் புத்தியானது கற்பூர புத்தியை கொண்டிருக்கும் . குணமானது சாந்தகுணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இறைவன் படைத்த ஒவ்வொரு படைப்புகளுமே மிக உயர்ந்தவை தான். அதில் குழந்தை வரம் என்பது ஒவ்வொரு குடும்பங்களின் ஏக்கமாக உள்ளது .மேலும் ஒரு குழந்தை இந்த உலகிற்கு எப்போது வர வேண்டும் என்பதை இறைவனே முடிவு செய்வார். அந்த முடிவு தவறாக இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்.

மனித வாழ்க்கை என்பது  சில நேரங்களில் சிறப்பான வாழ்க்கையும் ,சில நேரங்களில் அவமானம் ,துன்பம் என மாறி மாறி அமையக்கூடியது தான். அது எந்த மாதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் ஏற்று வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்