தங்கலான் முதல் “வாழை” வரை… OTT-யில் வெளியாகப்போகும் முக்கிய படங்கள்!
கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா, அருள் நிதியின் டிமாண்டி காலனி ஆகிய படங்கள் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தங்கலான், ரகு தாத்தா, நண்பன் ஒருவன் வந்தபிறகு, வாழை, டிமாண்டி காலனி 2 , ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் ஆன நிலையில், படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என காத்திருந்தார்கள். இதனையடுத்து, தற்போது முக்கியமான படங்கள் ஓடிடியில் வெளியாகும் தேதி பற்றிய தகவலை இதில் பார்ப்போம்.
தங்கலான்
விக்ரம் நடிப்பில் வெளியாகி 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த தங்கலான் படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியுள்ளது. எனவே, படம் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
வாழை
இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி நம்மளை கண்ணீரில் கரைய வைத்த வாழை திரைப்படம் எடுக்கும்போதே ஓடிடிக்கு என்று தான் எடுக்கப்பட்டது. படத்தை தயாரித்த டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தான் ஓடிடி உரிமையையும் பெற்றிருந்தது. பிறகு திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, படத்தை வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி ஓடிடியில் வெளியிடதிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிமாண்டி காலனி 2
முதல் பாகத்தை போல இரண்டாவது பாகத்திலும் நம்மளை கதிகலங்க வாய்த்த டிமாண்டி காலனி 2 படம் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி ஜி 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரகு தாத்தா
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ரகு தாத்தா படத்தின் ஓடிடி உரிமையை ZEE5 த நிறுவனம் தான் வாங்கியுள்ளது. இந்த படத்தினை வரும் செப்டம்பர் 13 முதல் ஸ்ட்ரீமிங் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நண்பன் ஒருவன் வந்த பிறகு
இளைஞர்கள் இந்த ஆண்டு கொண்டாடி தீர்த்த படங்களில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்திற்கும் ஒரு தனி இடம் உண்டு என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நல்ல படமாக இந்த ஆண்டு இந்த படம் அமைந்தது. இந்த படம் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.