பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்.!

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

James Earl Jone

அமெரிக்கா : பிரபல ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், இன்று காலை நியூயார்க்கில் உள்ள டச்சஸ் கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் தனது 93வது வயதில் காலமானார்.

இவர்து மரணத்திற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படடவில்லை. ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், STAR WARS படங்களில் டார்த் வேடர் கதாபாத்திரம், 90களில் வெளியான LION KING படங்களில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து மிகவும் பிரபலமானவர்.

அனிமேஷன் கதாபாத்திரங்களுக்கு அப்பால், ஜோன்ஸ், தி சாண்ட்லாட் (1993) படத்தில் மிஸ்டர் மெர்ட்டலாகவும், கம்மிங் டு அமெரிக்கா (1988) படத்தில் கிங் ஜாஃப் ஜோஃபராகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

கடந்த 2011ம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது ஆஸ்கர் அகாடமி.

அதுமட்டுமின்றி, இரண்டு எம்மி விருதுகள், ஒரு கோல்டன் குளோப், இரண்டு டோனி விருதுகள், ஒரு கிராமி, தேசிய கலைப் பதக்கம் மற்றும் கென்னடி சென்டர் ஹானர்ஸ் ஆகியவற்றை வென்றார்.

2022 ஆம் ஆண்டில், மன்ஹாட்டனின் கோர்ட் தியேட்டர் தி ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தியேட்டர் என்று மறுபெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்