இன்று அறிமுகமாகும் ஆப்பிள் 16 ஐபோன்..! என்னென்ன எதிர்பார்க்கலாம்!

இன்று நடைபெறும் ஆப்பிள் நிறுவனத்தின் "க்ளோடைம்" நிகழ்ச்சியில் புதிய ஐபோன் 16 சீரிஸ் போன்களை அறிமுகப்படுத்துகிறது.

Apple 16 Series

சென்னை : ஆப்பிள் நிறுவனம் ஆண்டுதோறும் பலவித கேட்ஜட்ஸை க்ளோடைம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகப்படுத்துவது வழக்கம். அதன்படி இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆப்பிள் நிறுவனம் “இட்ஸ் க்ளோடைம்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் ஏர்போட் போன்ற கேட்ஜட்களுடன் ஐபோன் 16 சீரிஸ் போனையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று வெளியாக இருக்கும் இந்த “ஐபோன் 16” ஆப்பிள் பிரியர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி இந்த ஐபோன்16-ல் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்னவென்று இதில் பார்க்கலாம்.

கேமரா :

ஐபோன் 16 சீரிஸின் மாடல்கள், அனைத்தும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உட்பட கணிசமான கேமரா மேம்படுத்தல்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், AI கேமரா வசதிகள், அதில் தொடக்கமாக தற்போது சிறிய அப்டேட்களுடனுமே வெளியாகும் என பயனர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்ப்ளே :

இந்த ஐபோன் 16 சீரியசில் ஐபோன் 16, ஐபோன் 16 ப்ளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன்16 ப்ரோமேக்ஸ் என 4 போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன்களில் 6.1 இன்ச் மற்றும் 6.7 இன்ச் திரைகள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புது பேஸிக் மாடல்களுக்கு, புதிய வகையிலான கேமரா அமைப்பை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த புதிய வடிவமைப்பு, வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும் திட்டத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் இந்த அம்சம் ப்ரோ மாடல்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே அம்சங்களில் வேறு ஏதேனும் புதிய திட்டங்களுடன் ஐபோன் 16 ப்ரோவும், ப்ரோ மேக்ஸும் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஐபோன் 15-ஐ ஒப்பிட்டு பார்த்தால் இது தனித்துவமாக இருக்கும் என தெரிகிறது.

A18 சிப் :

ஐபோன் 16 சீரிஸ், A18 சிப்பிற்கு மாறுகிறது. இந்த வகை சிப் ஐபோன் 16  சீரிஸின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், கேமிங், மல்டிடாஸ்க் மற்றும் அன்றாட பயன்பாட்டை இந்த சிப் மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 மாடல்களில் 8ஜிபி ரேம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி :

ஐபோன் 16 சீரிஸ், 40W வயர்டு சார்ஜிங் மற்றும் 20W மாக்சேஃப் (Mag Safe) சார்ஜிங்கை கொண்டு களமிறங்கும் என ஒரு வதந்தி பரவி வந்தது. ஆனால், அது உன்மையா என்று ஐபோன் வெளியானால் மட்டுமே தெரியும். ஆனால், ஒரு சில பயனர்கள் ஐபோன் 15 சீரியஸ் 27W சார்ஜிங் வேகத்தில் இருந்ததால், ஐபோன் 16-ம் 20W முதல் 27W வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் AI :

ஐபோன் சீரிஸ், AI மீது அதிக கவனம் செலுத்துகிறது. இதனால், வெளியாக இருக்கும் ஐபோன் 16 சீரியசில் அனைத்து மாடல்களிலும் இந்த AI உதவிகளுடன் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. AI கருவிகளின் உதவியோடு மிகவும் துல்லியமாக பதிலளிக்கக்கூடிய வகையிலும் சிக்கலான பணிகளைக் கையாளும் திறன்களை கொண்டும் புதுப்பிக்கப்பட்ட புதிய அம்சத்துடன் வெளியாகும் என கூறுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்