பாஜகவை கண்டு மக்கள் யாரும் பயப்படவில்லை.! ராகுல் காந்தி பேச்சு.!
மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாஜக மற்றும் பிரதமர் மோடியை பார்த்து யாரும் பயப்படவில்லை என ராகுல் காந்தி அமெரிக்காவில் உரையாற்றியுள்ளார்.
டெல்லி : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பாஜக, பிரதமர் மோடி , ஆர்எஸ்எஸ் பற்றி தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், “இந்தியா என்பது ஒற்றை கருத்த்தை கொண்டு செயல்படுகிறது என ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது. இந்தியா பல்வேறு கருத்துக்களை கொண்டு செயல்படுகிறது நாங்கள் நம்புகிறோம். ஜாதி, மொழி, மதம், இனம் என வேறுபாடின்றி அனைவரும் அனைத்திலும் அனுமதிக்கப்பட வேண்டும், கனவு காண வேண்டும். அனைவருக்கும் உரிய வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு பாதகம் விளைவிக்கும் வகையில் செயல்படுகிறார் என்பதை இந்திய மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டனர். இந்திய மக்களின் எண்ணங்கள் தேர்தலில் பிரதிபலித்தது. பாஜகவால் இதனை புரிந்துகொள்ளமுடியவில்லை.
தேர்தல் முடிவுகள் வந்த சில நிமிடங்களிலேயே, இந்தியாவில் பாஜகவைக் கண்டும், பிரதமர் மோடியை கண்டும் யாரும் பயப்படவில்லை. இது மிகப்பெரிய சாதனை. ராகுல் காந்தியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ இதற்கு கரணம் அல்ல. இது நமது ஜனநாயகத்தை உணர்ந்த இந்திய மக்களின் மாபெரும் சாதனை.
நான் அரசியலமைப்பு சட்டத்தை பற்றி பேசும் போது நான் சொல்வதை மக்கள் புரிந்து கொண்டனர். பாஜக, நமது இந்திய பாரம்பரியத்தை தாக்குகிறது. நமது மொழியை தாக்குகிறது, நமது மாநிலங்களை தாக்குகிறது, நமது வரலாறுகளை தாக்குகிறது. மிக முக்கியமாக, பாஜக இந்திய அரசியலமைப்பைத் தாக்குகிரார்கள். ” என ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்டார்.