‘கங்குவா ரிலீஸ் தேதி தள்ளிப்போக இதுதான் காரணம்’…உண்மையை உடைத்த தனஞ்செயன்!
கங்குவா படத்தை வேட்டையன் படத்துடன் வெளியீட்டால் சரியாக இருக்காது என சூர்யா சொன்னதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தேதியில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த சூழலில், ரஜினி படத்துடன் மோதமுடியாது தங்களுடைய படம் அவருடைய முன்னாள் குழந்தை என கூறி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்கிறது என்பதை சூர்யாவே உறுதி படுத்தி இருந்தார்.
இன்னும் கங்குவா படத்தின் இறுதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளது குறித்து பிரபல தயாரிப்பாளரான தனஞ்செயன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார். முதலில் கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்ட போது வேட்டையன் படத்தை லைக்கா தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டு இருந்ததாக தெரிந்து தான் அக்டோபர் 10-ஆம் தேதி கங்குவா வெளியாகும் என அறிவித்தார்களாம்.
பிறகு வேட்டையன் படம் அதே தேதியில் வெளியாவதாக வந்த அறிவிப்பை பார்த்தவுடன் சூர்யா தயாரிப்பாளர்களுடன் இணைந்து பேசினாராம். அவர் நமக்கு குரு அவருக்கு போட்டியாக நம்மளுடைய படத்தை இறக்கினால் அது சரியாக இருக்காது. அவருடைய மார்க்கெட்டுக்கு இணையாக படத்தை இறக்கி உள்ளார்கள் என பேசுவார்கள். அதனால் அதே தேதியில் படத்தை ரிலீஸ் செய்யவேண்டாம் என சூர்யா கேட்டுக்கொண்டாராம்.
அது மட்டுமின்றி கங்கா படம் மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால் தனியாக இறங்கினால் மட்டும் தான் சரியான வசூலை ஈட்டமுடியும், எனவே தனியாகவே ரிலீஸ் செய்வோம் என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முடிவெடுத்துள்ளாராம். இதனால் தான் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது எனவும், கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதிக்குள் படம் திரையரங்குகளுக்கு வந்துவிடும் என்றும், பேட்டியில் தனஞ்செயன் கூறியுள்ளார்.