விநாயகர் சதுர்த்தி திருவிழா! வித்தியாசமாக செய்யப்பட்ட சிலைகள்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹைதராபாத் மாநிலத்தில் 70 அடி விநாயகர் சிலை பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை தங்கள் பகுதிகளில் வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், வருடம் வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வித்தியாசமான விநாயகர் சிலைகள் செய்வது உண்டு. அதிலும் குறிப்பாக, அந்த ஆண்டுகளில் எந்தெந்த படங்கள் பெரிய படமாக இருக்கிறதோ அந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களையும் சிலையாக செய்வது உண்டு.
மேலும் சில இடங்களில் பெரிய பெரிய அளவுக்கு பிரமாண்டமாக சிலைகள் செய்வது உண்டு. அப்படி இந்த ஆண்டு வித்தியாசமாக செய்யப்பட்ட சிலைகள் பற்றி பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பூரி கடற்கரையில் சாண்ட்ஆர்ட்டில் “உலக அமைதி” என்ற வசனத்துடன் , 20 வகையான பல்வேறு பழங்களை வைத்து, பார்த்தவுடன் கவரும் வகையில், விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.
அதைப்போல, உத்திர பிரதேசம் மாநிலத்தில் ராம் சரண் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தில் வரும் கதாபாத்திரத்தை போல விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் மாநிலத்தில் கைர்தாபாத் என்கிற இடத்தில் 70 அடி விநாயகர் சிலை பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூளவாடி பகுதியில் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கான விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.
விஜய் நடித்த கோட் படம் வெளியானதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் நகரியில் SJ Cinemas திரையரங்கில்படத்தில் வரும் விஜய் லுக் போல விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றதை மையமாக வைத்து விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.