‘IC-814’ சர்ச்சை : “நான் சலிப்படையவில்லை”! இயக்குநர் அனுபவ் சின்ஹா பேட்டி!
நெட்ஃபிலிக்ஸில் ஓடிடி தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய 'IC-816' வெப் சீரியஸின் இயக்குநர் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை : உண்மை கதையை அடிப்படையாய் கொண்டு உருவாகி இருந்த தொடர் தான் ‘IC-814 தி கந்தஹார் ஹைஜாக்’. இந்த தொடர் மத ரீதியான சர்ச்சையில் சிக்கி இருந்தது. இது குறித்து முதலில் அந்த வெப் சீரியஸின் இயக்குந ர் பதிலளிக்கவில்லை என்றாலும் தற்போது மௌனம் கலைத்துள்ளார்.
கடந்த, 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் IC 814- என்ற விமானத்தை சில தீவிரவாதிகள் கடத்தினார்கள். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த தொடர் முழுவதும் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த வெப் சீரியஸில், தீவிரவாதிகள் கதாபாத்திரத்தில் வரும் சிலருக்கு இந்து பெயராக வைத்திருப்பதே தற்போது விவாத பொருளாக மாறியிருக்கிறது
இது சர்ச்சையாக வெடித்த போது அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரும் அந்த தொடரில் கட்டப்பட்டது போல அந்த கடத்தல் காரர்களின் உண்மையான பெயர் தான் என கூறியிருந்தார். மேலும், அந்த வெப் சீரியஸை இயக்கிய அனுபவ் சின்ஹா தனியார் பத்திரிகைக்கு இந்த IC-814 வெப் சீரியஸ் சர்ச்சையை குறித்து பேட்டி அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “எனக்கு கிடைத்த சில பாராட்டும், அன்பும் என் மீது எழுந்துள்ள இது போன்ற சர்ச்சைகளை மங்கச் செய்கிறது. இது முடியிலும் வித்தியாசமான சர்ச்சையாக இருக்கிறது. நான் இந்த விளையாட்டை விளையாட விரும்பவுமில்லை. அதை எப்படி செய்வது என்றும் எனக்குத் தெரியவில்லை.எனக்கு படம் இயக்க மட்டும் தான் தெரியும்.
நாங்கள் 2022 முதலே இதற்காக உழைத்து வருகிறோம். இந்த ஸ்கிரிப்டிலும் உண்மையாக இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் நான் அந்த அளவிற்கு ஆக்டிவாக இல்லை, இருப்பினும் இந்த விவாதங்கள் குறித்து கேள்விப்பட்டேன். ஒரு திரைப்பட கலைஞனாக தூய்மையான மனநிலையுடனே எனது வேலையை நான் செய்யகிரியின்”, என அனுபவ் சின்ஹா கூறியிருந்தார்.