‘எமர்ஜன்சி திரைப்படம் ஒத்திவைப்பு’! – கனத்த இதயத்துடன் தெரிவித்த கங்கனா ரனாவத் !
இன்று வெளியாக இருந்த 'எமர்ஜன்சி' திரைப்படம் தள்ளிப்போவதாக இயக்குநரும், நடிகருமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
சென்னை : பாலிவுட் நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் முதல் முறையாக தாமாக இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ‘எமர்ஜன்சி’. இந்த படம் இன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தள்ளிச் சென்றுள்ளதாக கங்கனா தெரிவித்திருக்கிறார்.
பல சிக்கல்களால் தணிக்கை சான்றிதழ் இந்த ‘எமர்ஜன்சி’ திரைப்படத்திற்கு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை. இந்தியாவின் முன்னாள் பிரதமாரான ‘இந்திரா காந்தி’ அமலுக்கு கொண்டு வந்த 21 மாத அவசர நிலையை மையக் கருவாக வைத்து உருவாகியுள்ள படம் தான் ‘எமர்ஜென்சி’.
இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும், பாஜக எம்பியான பிறகு கங்கனா ரனாவத் அரசியல் சார்ந்த படம் நடித்திருக்கிறார். இதனாலே இந்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது முதல் எதிர்பார்ப்பு இருந்து வந்தது,
மேலும், இந்த படத்தின் டீசர் கடந்த ஆகஸ்ட்-14ம் தேதி வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. இந்த படத்தில் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான காட்சிகள் இருப்பதாக சீக்கிய அமைப்பினர் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் விசாரித்தது. இது போன்ற பல சிக்கல்கள் இருந்து வருவதால் படத்திற்கான தணிக்கைச் சான்றிதழை இன்னும் அளிக்கவில்லை. இதனால், படத்தின் இயக்குநரும் நடிகையுமான கங்கனா ரனாவத் கனத்த இதயத்துடன் படம் இன்று வெளியாகாது என தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது குறித்து அந்த பதிவில், “நான் இயக்கிய எமர்ஜென்சி திரைப்படம் தள்ளிப்போவதை கனத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். தணிக்கை வாரியத்திடம் இருந்து சான்றிதழ் பெற காத்திருக்கிறோம். விரைவில் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். உங்கள் காத்திருப்புக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி, ” என பதிவிட்டிருந்தார்.
With a heavy heart I announce that my directorial Emergency has been postponed, we are still waiting for the certification from censor board, new release date will be announced soon, thanks for your understanding and patience 🙏
— Kangana Ranaut (@KanganaTeam) September 6, 2024