பிக் பாஸ் 8-இல் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள்! லிஸ்டில் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா, ரஞ்சித் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Bigg Boss 8 Contestants List

 சென்னை :  பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கினாலே போதும் மக்களுக்கு 100 நாட்களுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது. இதுவரை 7 தமிழ் சீசன்கள் நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் தொடங்குவதற்கான,ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு முக்கிய பகுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விலகியதை தொடர்ந்து விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என அறிவிப்பு வெளியாகிவிட்டது.

விரைவில் நிகழ்ச்சி எந்த தேதியில் தொடங்கும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு வெளியாவது வழக்கமான ஒன்று. அப்படி தான் தற்போது பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதிலும் முதல் பெயராக கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை உருவாக்கிய தர்ஷா குப்தா பெயர் இருக்கிறது. அடுத்ததாக, அப்பாவி தனத்தை இயல்பாக கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகை ஷாலின் ஜோயாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

அதைப்போல, சீரியல்களில் மட்டுமே பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளாராம். அவரைப்போல, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்தும் கலந்துள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே, கடந்த 7-வது சீசனில் கலந்துகொள்ளவிருந்ததாக தகவல்கள் வெளியானது.

ஆனால், தனிப்பட்ட சில காரணங்களால் செய்தியாளர் ரஞ்சிதால் 7-வது சீசனில் கலந்துகொள்ளமுடியாமல் போனதாக கூறப்பட்டது. இதனையடுத்து, தற்போது 8-வது சீசன் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பல பெண் ரசிகைகள் கொண்ட பிக் பாஸ் பிரபலம் அஸ்வினும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

அதைப்போலவே, சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகர் பப்லுவும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் கலக்கி கொண்டிருந்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஸ்ரீ தேவி விஜயகுமாரும் இந்த சீசன் கலந்துகொள்ள திட்டமிட்டு இருக்கிறாராம். இவர்கள் கலந்துகொள்ளும் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விரைவில் கலந்துகொள்ள பிரபலங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கண்டிப்பாக, மேலே குறிப்பிட்டுள்ள பிரபலங்கள் கலந்துகொண்டால் நிகழ்ச்சியில் வேடிக்கையான விஷயங்களுக்கு பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்