பாராலிம்பிக்ஸ் : 9-ஆம் நாள்! இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உண்டா?

நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி 25 பதக்கங்களுடன் 16-வது இடத்தில் வகித்து வருகிறது.

India at Paralympics - Day 9

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி இது வரை இல்லாத அளவிற்கு வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இந்திய அணி இது வரை 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்த நிலையில், இன்று பாராலிம்பிக் தொடரின் 9-வது நாள் நடைபெற உள்ளது. இன்றும் இந்திய அணி 5 பதக்கப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். நேற்றைய நாள் நடைபெற்ற ஜூடோ போட்டியில் இந்திய அணி சார்பாக பில் பர்மர் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

இன்றைய பதக்க போட்டிகள் :

ஈட்டி எறிதல் :

  • பகல் 02:07 மணி – திபேஷ் குமார் – ஆண்களுக்கான இறுதிப் போட்டி.
  • இரவு 10.30 மணி – பாவனாபென் அஜபாஜி சவுத்ரி -பெண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி

உயரம் தாண்டுதல் :

  • பகல் 03:21 மணி – பிரவீன் குமார் – ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டி

பவர் லிஃப்டிங் :

  • இரவு 08:30 மணி – கஸ்தூரி ராஜாமணி -பெண்களுக்கான 67 கிலோ இறுதிப் போட்டி

குண்டு எறிதல் :

  • இரவு 10:34 மணி – சோமன் ராணா, ஹோகடோ ஹோடோஜெ செமா – ஆண்களுக்கான இறுதிப் போட்டி

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்