20 ஆண்டில் முதல் முறையாக அதில் இடம்பெறாத மெஸ்ஸி-ரொனால்டோ! ரசிகர்கள் ஷாக்!
பாலன் டி'ஓர் விருதுபட்டியலில் கால்பந்து வீரர்களான ரொனால்டோ மெஸ்ஸி இருவரின் பெயர்களும் இடம்பெறவில்லை.
சென்னை : கால்பந்து உலகில் உயரிய விருதாக கருதப்படும் பாலன் டி’ஓர் விருதுபட்டியலில் முதல் முறையாக கால்பந்து ஜாமாபாவங்களான மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால், அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
கால்பந்து விளையாட்டுக்கான ரசிகர்கள் உலகம் முழுவதுமே இருந்து வருகின்றனர். எந்த ஒரு கால்பந்து தொடர் நடைபெற்றாலும் அது உலகின் பெரும்பாலான நாடுகளில் மிகவும் எதிர்பார்ப்புடனே நடைபெற்று வரும்.
கால்பந்து போட்டிகளுக்கு எந்த அளவிற்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே போல பாலன் டி’ஓர் விருது வழங்கும் விழாவிற்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.1956-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் இதழால் உருவாக்கப்பட்ட இந்த விருந்தானது கால்பந்து உலகில் மிகப்பெரிய விருதாக பார்க்கப்படுகிறது.
தற்போது, வரை கால் பந்தில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஆண்டு தோறும் வழங்ப்பட்டு வருகிறது. இந்த விருதை அதிக முறை வென்றவர்கள் என்ற பெருமையை கால்பந்து ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் தான் படைத்துள்ளனர்.
கடந்த 2003ம் ஆண்டில் இருந்து தற்போது வரை தொடர்ந்து பலோன் டி’ஓர் பரிந்துரையில் இருவரும் இடம்பெற்று வருகின்றனர். அதில் லியோனல் மெஸ்ஸி 8 முறையும், ரொனால்டோ 5 முறையும் இந்த விருதை வென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, 20 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த பட்டியலில் மெஸ்ஸி, ரொனால்டோ பெயர்கள் இடம் பெறவில்லை என்பது ரசிகர்களை அதிர்ச்சியிலும், வருத்தத்திலும் ஆழ்த்தியுள்ளது.