பேரிடர் காலங்களில் குற்றச்சாட்டுகளைவிட பொதுச்சேவை செய்வதே முக்கியம்: பவன் கல்யாண்.!
"நான் சென்று பார்வையிட வேண்டும் என்பதை விட, நிவாரண பணிகள் எவ்வித சிறமமும் இன்றி சிறப்பாக நடக்க வேண்டும் என்பதே எனது நிலைபாடு" என, தன் மீது எழுந்த குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்துள்ளார் பவன் கல்யான்.
விஜயவாடா : அந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் தங்கள் உடமைகளையும் இழந்து தவித்து வரும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், மக்களை பாதுகாக்கும் பணியில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான மாநில அரசு பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அது மட்டும் இன்றி முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இரவு பகல் பாராமல் களத்திற்கே நேரடியாக சென்று நிவாரண பணிகளை ஆய்வு செய்வது, மக்களின் அவலநிலையை கேட்டறிவது, அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு இடையில்தான், பவன் கல்யாண் மீதான குற்றச்சாட்டு ஒன்று சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி தளங்களில் தீயாக பரவி வருகிறது.
சினிமா துறையில் இருந்து அரசியல் களத்திற்கு வந்து மக்கள் சேவை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் பவன் கல்யான், வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட வராதது ஏன்? மக்களின் நிலை குறித்து கேட்டறியாதது ஏன்? மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியா? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
தனக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள இந்த கேள்விகளுக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த பவன் கல்யாண், ” பேரிடர் காலங்களில் குற்றச்சாட்டுகளைவிட பொதுச்சேவை செய்வதே முக்கியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், நான் சென்று பார்வையிட வேண்டும் என்பதை விட, நிவாரண பணிகள் எவ்வித சிறமமும் இன்றி சிறப்பாக நடக்க வேண்டும் என்பதே எனது நிலைபாடு. பாதிப்புகளை பார்க்க வேண்டுமென விரும்பினாலும் எனது வருகை சுமையாகிவிடக்கூடாது.” என, அம்மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.
தெலுங்கில் பெரிய ஸ்டாராக வலம் வரும் பவன் கல்யாண், வெள்ள பாதிப்பு இடங்களில் வருகை புரிவதினால், ரசிகர்கள் கூட்டத்தால் நிவாரண பணிகள் பாதிக்ககூடும்.