“ஜாலியோ ஜிம்கானா.!” : சிகாகோ வீதியில் முதலமைச்சரின் சைக்கிள் பயணம்…
சிகாகோ சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள வீதியில் ஜாலியாக ஒரு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சான் பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சிகாகோ சென்றடைந்தார்.
சான் பிரான்சிஸ்கோ போலவே சிகாகோவிலும் உள்ள தமிழர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சான் பிரான்சிஸ்கோவில் தொழில் முதலீட்டாளர் மாநாடு, அங்குள்ள தமிழர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஓய்வு இடையில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத காரில் பயணம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதே போன்று, தற்போது சிகாகோ வந்துள்ள முதலமைச்சர், இங்கு , ஜாலியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டார். அவர் சைக்கிள் ஓட்டும் வீடீயோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “மாலை நேரத்து அமைதி, புதிய கனவுகளுக்கு களம் அமைக்கிறது.” என பதிவிட்டுள்ளார். கார் வீடியோ போலவே இந்த சைக்கிள் பயண வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Evening’s calm sets the stage for new dreams. pic.twitter.com/IOqZh5PYLq
— M.K.Stalin (@mkstalin) September 4, 2024
சான் பிரான்சிஸ்கோவில் பன்னாட்டு தொழில் நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க, அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதனை தொடர்ந்து 900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தற்போது சிகாகோவில் உள்ள பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை முதலமைச்சர் அடுத்ததாக சந்திக்க உள்ளார்.