பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட பிரபலத்துடன் டிக் டாக்! விளக்கம் கொடுத்த ஷாலின் சோயா !

சென்னை : பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள எடவேல பாபுவுடன் டிக் டாக் செய்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், நடிகை ஷாலின் சோயா விளக்கம் அளித்துள்ளார். 

shalin zoya

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது மலையாள சினிமாவையே தற்போது புரட்டி போட்டுள்ளது. அறிக்கை வெளியானதில் இருந்து, தைரியமாக நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல், தொந்தரவு பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வகையில், நடிகை மினு முந்நீர்  கேரளா நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு செய்த அநாகரீக செயலைப் பற்றி வெளிப்படையாகவே பேசியிருந்தார்.

நடிகர் சங்க அமைப்பில் உறுப்பினராக தன்னை சேர்க்க வேண்டும் என கேட்டபோது அவர் அதற்கான படிவத்தை தனது வீட்டில் வந்து பூர்த்தி செய்து தருமாறு கூறியதாகவும், அதற்காக அங்கு சென்றபோது அவர் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டி பேசியிருந்தார். இதனையடுத்து, அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்களும் எழுந்தது.

அந்த சூழலில் தான், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது அப்பாவிதனத்தின் மூலம் பிரபலமான நடிகை ஷாலின் சோயா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடவேல பாபுவுடன் இணைந்து நெருக்கமாக டிக் டாக் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. வீடியோவை பார்த்த பலரும்  இந்த பிரபலத்துடனா டிக் டாக் செய்துள்ளீர்கள்? என்கிற பல்வேறு விமர்சனங்கள் ஷாலின் சோயா மீது எழுந்தது.

இந்த சூழலில், இது பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஒரு டிக் டாக் வீடியோ, பெயர் தெரியாத கொடுமைக்காரர்கள் இங்கே உண்மையான வில்லன்கள். அவர்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன் என கோபத்துடன் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” பல வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது நான் அவருடன் இணைந்து டிக் டாக் செய்தேன். அப்போது, அந்த பட மிகவும் ட்ரெண்டிங்கில் இருந்த காரணத்தால் ரீல்ஸ் எடுக்கப்பட்டது. வேடிக்கையாக இருந்தது என்பதால் எடுத்தோம். இந்த மாதிரி நேரத்தில் இப்படி பேசி என்னுடைய பெயரை அசிங்கப்படுத்துவது சரியானது அல்ல.

இப்படி செய்வது, நான் இங்கே என்ன செய்ய முடியும்? நீங்கள் சொல்லுங்கள். இதை நான் மீண்டும் விளக்கமாக சொன்னால் கொடுரமான இந்த ட்ரோல் உலகில் ட்ரோல் செய்யப்படுவேன். பெயர் தெரியாத கொடுமைக்காரர்கள் இங்கே உண்மையான வில்லன்கள். அவர்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன்” எனவும் கோபத்துடன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்