சிறகடிக்க ஆசை சீரியல்.. ஸ்ருதியால் வீட்டில் வெடித்த கலவரம்..!
சென்னை- சிறகடிக்க ஆசை சீரியல் தொடரில் இன்றைக்கான [ஆகஸ்ட் 31]எபிசோடில்.. ஸ்ருதி செய்யும் சேட்டைகளை தாங்க முடியாத விஜயா ஸ்ருதியின் அம்மாவிடம் கண்டிக்குமாறு அறிவுறுத்துகிறார்.
மீனா விஜயாவுக்கு ஒத்தடம் கொடுக்கலாம்னு போறாங்க.. அப்போ முத்து வராரு என்ன மீனா பண்றேன்னு விசாரிக்கிறாரு.. மீனாவும் அத்தைக்கு வலி குறைய ஒத்தடம் கொடுக்கப் போறீங்கன்னு சொல்றாங்க. அதுக்கு முத்து வேணாம் இதுக்கும் உன்னை தான் திட்டுவாங்க.. விஜயா மாதிரியே நடிச்சு காட்டுறாங்க.. ஆனாலும் மீனா விஜயா ரூமுக்கு போறாங்க ..அத்தை இப்ப எப்படி இருக்கு வலி குறைஞ்சிருக்கா.. ஏண்டி வலி குறைஞ்சு இருந்தா மறுபடியும் என்னை விழ வைக்கலாம்னு பாக்குறியா அப்படின்னு கோவமா கேக்குறாங்க.. ஆனா மீனா அப்புடியெல்லாம் இல்ல அத்தை உங்களுக்கு வலி குறைய ஒத்தடம் கொடுக்கலாம்னு வந்தேன்.. அப்படின்னு அதை கொடுத்துட்டு போறாங்க.. விஜயாவும் முதல்ல வேண்டாம் சொல்றாங்க அப்புறம் வாங்கி ஒத்தடம் வச்சிக்கிறாங்க .
சூடு கம்மியானதும் கிச்சனுக்கு போறாங்க ..அங்க மீனா மேல ஏறி நின்னுட்டு இருக்காங்க .ஏய் என்னடி பண்ற அத்தை உங்களுக்கு பத்து போடணும் அதுக்கு மாவு எடுத்துட்டு இருக்கேன் அப்படின்னு சொல்றாங்க. இப்போ ஸ்டூல்ல கால் வைக்கலாம்னு போறாங்க விழ போறாங்க ஆனா முத்து வந்து புடிச்சிடுறாரு.. மாவெல்லாம் விஜயாவோட தலையில கொட்டிருது. அதோட வெளியில விஜயா வராங்க இதை பார்த்த மனோஜ் பயந்து போய் ரோகிணியை கட்டிப்பிடித்து விடுகிறார்.. அப்புறம் நடந்ததெல்லாம் சொல்றாங்க. முத்துவும் ஸ்ருதியும் விஜயாவை கிண்டல் அடிச்சு சிரிக்கிறாங்க ..ஒரு படி மேல போய் சுருதி அவங்க கூட செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் போடுறாங்க.. இப்போ விஜயா குளிச்சிட்டு வராங்க.. அப்ப ரோகிணி செல் எடுத்துட்டு ஆன்ட்டி ஸ்ருதிய பாருங்க உங்களோட போட்டோவ ஸ்டேட்டஷா வச்சிட்டா.. அவ சும்மாதான் சொல்றான்னு நினைச்சா இப்படி எல்லாம் பண்ணிட்டாளா..
ரோகினியும் ஏத்தி விடுற மாதிரி இதெல்லாம் பார்த்தா மத்தவங்க.. சொந்தக்காரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க ஆண்ட்டி.. உங்களை கோமாளினு நினைக்க மாட்டாங்களா அப்படின்னு சொல்லவும் விஜயா சரி நம்ம ரெண்டு பேரும் பார்வதி வீட்டுக்கு போலாம்னு கிளம்புறாங்க.. அங்க போயிட்டு ஸ்ருதி ஓட அம்மாவை வர சொல்றாங்க.. ஸ்ருதி அம்மாவும் வந்து விசாரிக்கிறாங்க.. அப்போ விஜயா சுருதி பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாங்க.. உங்க பொண்ண நீங்க என்ன வளர்த்து இருக்கீங்க மரியாதையே கொடுக்க மாட்டேங்குறா.. அவ சேட்டை தாங்க முடியல அந்த மீனா கூட சேர்ந்துக்கிட்டு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்குறா..
என் பிள்ளையையும் மதிக்க மாட்டேங்குறா மரியாதை இல்லாம பேசுறா காலுக்கு எல்லாம் நெயில் பாலிஷ் போட எனக்கு மாமியாருன்னு மரியாத கூட கொடுக்க மாட்டுற அப்புடின்னு எல்லாத்தையுமே சொல்லிர்றாங்க.. ஆனா சுதா சொல்றாங்க ஸ்ருதி அப்படி பண்றவ இல்லையே அவளுக்கு கொஞ்சம் செல்லம் கொடுத்து வளர்த்தோம் ஆனால் இப்படி எல்லாம் பண்ண மாட்டாளே அப்படின்னு சொல்றாங்க. ரோகினியும் இல்ல ஆண்ட்டி அவங்க கொஞ்ச நாளாவே இப்படித்தான் பண்றாங்க ஆனா நல்ல பொண்ணு தான் திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல. இப்போ விஜயா சொல்லுறாங்க கொஞ்சம் சொல்லி கண்டிச்சு வைங்க அப்படின்னு சொல்றாங்க.