புதிய பிரேக்கிங் வசதிகளுடன் கெத்தாக களமிறங்கும் ராயல் என்ஃஃபீல்டு கிளாசிக் 500
எவ்வளவு பெரிய கம்பெனி புதிய தொழில்நுட்பம் என கூறி வந்தாலும், தனது விற்பனையில் மக்கள் மத்தியில் மாஸ் காட்டி வரும் நிறுவனம் ராயல் என்ஃபீல்டுதான். மோட்டார் சந்தையில் எவ்வளவு போட்டிகள் இருந்தாலும் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துள்ளது இந்நிறுவனம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகளில் பெரும்பாலும் சாதாரண ஸ்டேண்டர்டு ரக பைக்குகளே வருகிறது. தற்போது வந்த தகவலின்.படி இனி வரும் மாடல்களிஸ் ஏபிஎஸ் ரக பிரேக்கிங் சிஸ்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அதனால் ராயல் என்ஃபீல்டின் பிரேக்கிங் சிஸ்டம் மீது வாடிக்கையாளர்களுக்குகு இன்னும் அதிக நம்பகதன்மை உருவாகியுள்ளது.
தற்போது வரவுள்ள ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500 மாடல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதியுடன் எக்ஸ் ஷோரூம் விலை 2.10 லட்சமாக நிர்ணயிக்கபட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த மாடல், ஒரு சிலிண்டர் கொண்ட 499சிசி ஏர்கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27.2 பிஎச்பி பவரையும், 41.3nm டார்க் திறனையும் வேளிபடுத்தும். இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து ராயல் என்ஃபீல்டு ரக பைக்குகளுக்கும் ஏபிஎஸ் ரக பிரேக்கிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU