மக்களே!! ரேஷனில் ஆகஸ்ட் மாத பொருட்கள் வாங்கவில்லையா? வெளியான முக்கிய அறிவிப்பு.!
ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் செப்.5ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை : ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்டம்பர் 5ம் தேதி வரை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மாதத்தின் கடைசி பணி நாளில், அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,ரேஷன் கடைகளில் இம்மாதத்திற்கான பொருட்களை இதுவரை வாங்காதவர்கள் இன்று வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதிவரை பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
தட்டுபாடு காரணமாக இம்மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை பல குடும்ப அட்டைதாரர்கள் பெறாததால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரேஷன் பொருள் தட்டுப்பாடு பிரச்னைக்கு 90% தீர்வு காணப்பட்டதாக தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை பெற்றுக் கொள்ளலாம்
ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதிவரையில் பெற்றுக் கொள்ளலாம் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.