தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய தினம் சரிந்தது போல், இன்றும் சற்று குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை : சென்னையில் இன்றைய நிலவரப்படி (31-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,200 ஆகவும், கிராமுக்கு ரூ.7,150 ஆகவும் விற்பனையாகிறது.