தமிழ் சினிமாவில் மீண்டும் ஸ்ருதிஹாசன்! ‘கூலி’ படத்தில் மாஸ் என்ட்ரி!

shruti haasan

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ கூலி’ படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்தில் இன்னும் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற அளவுக்கு ஏற்கனவே எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதை போஸ்டர் வெளியீட்டு படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரில் கையில் மம்பட்டியுடன் மிரட்டலான தோற்றத்தில் இருப்பதாய் காணலாம்.

ஏற்கனவே, படத்தில் மலையாள நடிகர்சௌபின் சாகிர் ‘Dayal’ கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனா ‘Simon’ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து தற்போது ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ள கதாபாத்திரத்திற்கான பெயர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தில், ஸ்ருதிஹாசன் ‘Preethi’ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கையில் மம்பட்டியுடன் ஸ்ருதிஹாசன் இருப்பதால் கண்டிப்பாக படத்தில் அவருக்கும் ஆக்சன் காட்சிகள் எல்லாம் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் இயக்கியிருந்த விக்ரம் படத்தில் ஏஜென்ட் டினா கதாபாத்திரத்திற்கு அவர் முக்கியத்துவம் கொடுத்து சண்டைக்காட்சிகள் வைத்திருந்தது பெரிய அளவில் பேசப்பட்டது.

எனவே, ஸ்ருதிஹாசனும் ஆக்சன் காட்சிகள் கொண்ட படங்கள் என்றால் டூப் கூட போடாமல் நடிக்க கூடிய ஒரு நடிகை. எனவே, படத்தில் அவருக்கு எந்த அளவுக்கு ஸ்டண்ட் காட்சிகள் உள்ளது. அவர் ரஜினிக்கு யார் என்பது படம் வெளியான பிறகு தான் தெரிய வரும். கடைசியாக தமிழில், ஸ்ருதிஹாசன் லாபம் படத்தில் நடித்திருந்தார். லாபம் படம் 2021-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்