கட்டுக்கடங்காத கவர்ச்சி…ஹிந்தி படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் வாங்கிய பிரமாண்ட சம்பளம்?

சென்னை : யுத்ரா எனும் ஹிந்தி திரைப்படத்தில் கவர்ச்சியாக நடித்ததற்காக நடிகை மாளவிகா மோகனன் சம்பளமாக 4 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சினிமாத் துறையில் இருக்கும் சில நடிகர்கள், நடிகைகள் பலரும் எந்த மாதிரி காட்சிகள் கொடுத்தாலும் நடிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கதைகளுக்குத் தேவைப்படும் காரணத்தால், எந்த காட்சிகளிலும் நடிக்கத் தயங்குவது இல்லை. அப்படி தான் தற்போது நடிகை மாளவிகா மோகனன் “யுத்ரா” திரைப்படத்தில் கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருக்கிறது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழு சமீபத்தில் வெளியீட்டு இருந்தது. டிரைலரில் அதிரடியான காட்சிகள் இடம்பெற்றிருந்தது போல மாளவிகா மோகனன் கவர்ச்சியாக முத்தக்காட்சிகளில் நடித்ததும், கிளாமரான உடையில் நடித்திருந்த சில காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. படத்திற்குத் தேவை என்பதால் அவர் இப்படி நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கவர்ச்சியான காட்சிகள் நிறைந்த இந்த படத்தில் நடிக்க நடிகை மாளவிகா மோகனன் வாங்கிய சம்பளம் குறித்த தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்த படத்தில் நடிக்க நடிகை மாளவிகா மோகனன் 3 -யில் இருந்து 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கவர்ச்சியான காட்சிகளைத் தாண்டி படத்தில் மாளவிகா மோகனனுக்கு தனி ஸ்டண்ட் காட்சிகள் இருப்பதாகவும் டிரைலரை வைத்துப் பார்க்கையில் தெரிகிறது.
அதுமட்டுமின்றி, நடிகை மாளவிகா மோகனனுக்கு தங்கலான் படத்தில் நடித்த பிறகு மார்க்கெட் அதிகமாகிவிட்டது. இதன் காரணமாக அவர் தனது சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார். தங்கலான் படத்திற்கு முன்னதாகவே, யுத்ரா படத்தில் நடிக்க கமிட் ஆன காரணத்தால் படத்திற்கு 4 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறார். தங்கலான் படம் வெற்றிப்படமாக அமைந்துள்ள காரணத்தால், அடுத்ததாகத் தனது சம்பளத்தை 5 கோடி வரை உயர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025