மாரி செல்வராஜின் மாபெரும் வெற்றி… இன்று முதல் கேரளாவில் ‘வாழை’ திரைப்படம்!
கேரளா : கேரளாவில் உள்ள அனைத்து முக்கிய சென்டர்களிலும் ‘வாழை’ படம் இன்று முதல் திரையிடப்படுகிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியான “வாழை” திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது, இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் போன்ற விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜின் வெற்றி வரிசையில் இப்பொது வாழை திரைப்படமும் இணைந்துள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் முதல் வாரத்தில் 11 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்பொது இரண்டாவது வாரம் அடி எடுத்து வைத்துள்ள நிலையில், கேரளாவில் இன்று வெளியாகியுள்ளது. ‘வாழை’ படத்தை கேரளாவில் ட்ரீம் பிக் பிலிம்ஸ் விநியோகம் செய்கிறது. கேரளாவின் முக்கிய நகரங்களில் உள்ள சுமார் 50 திரையரங்குகளில் வாழை ரிலீஸாகிறது.
#Vaazhai from Today@mari_selvaraj@Music_Santhosh @Jayamoorthysing @ayngaran_offl @navvistudios @disneyplusHSTam@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films @Nikhilavimal1 @DreamBig_film_s @jsujithnair pic.twitter.com/RqIQ4uDZw5
— DREAMBIGFILMS (@DreamBig_film_s) August 30, 2024
மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் பார்வையாளர்களிடம் இருந்து கண்ணீரை வரவைக்க செய்தது. படத்தின் கதையும், கடைசி நிமிட காட்சிகளும் அவ்வாறு அமைந்திருக்கும். இவரது திரைப்படங்களின் கதைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் ஓங்கி ஒலித்து வருகிறது.
வாழை
நடிகர்கள் கலையரசன், நிகிலா விமல், பொன்வேல் எம் மற்றும் ராகுல் ஆர் நடித்துள்ள இந்த படத்தை நவ்வி ஸ்டுடியோஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் இணைந்து தயாரித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் எடிட்டராக சூர்ய பிரதமனும், பிஆர்ஓவாக சபரியும் பணியாற்றுகின்றனர்.