வாரம் முழுவதும் சரிவைக் காணாத பங்குச்சந்தை! குஷியில் முதலீட்டாளர்கள்!
சென்னை : இந்த வாரம் முழுவதும் இந்தியப் பங்குச்சந்தை சரிவைக் காணாமல் உச்சம் பெற்றே வருவதால் முதலீட்டாளர்கள் உற்சாகத்திலிருந்து வருகின்றனர்.
கடந்த வாரம் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் ஏற்றம் இறக்கத்துடனே வர்த்தகம் நடைபெற்று வந்தது. ஆனால், இந்த வாரம் முதலீட்டாளர்களைக் குஷி படுத்தும் வகையில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது என்றே கூறலாம். அதன்படி, இந்த வாரத் தொடக்க நாளே இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் சென்றது.
அது தொடர்ந்து கடந்த 4 நாட்களாக இறக்கம் காணாமல் ஏற்றம் கண்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்ந்து 82,418 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வந்தது. அதே போல் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 50 83 புள்ளிகள் உயர்ந்து 25,230 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் சிப்லா, ஐடிசி, கரூர் வைசியா வங்கி, ஏபிசி கேப்பிட்டல், மணப்பும் கோல்டு போன்ற பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருவதாகவும் கோல்டு பீஸ், டாட்டா மோட்டார்ஸ், உள்ளிட்ட சில பங்குகளின் விலை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன .
சுப்லக்ஷ்மி ஜூவல் ஆர்ட், டிவ்கி டார்க்ட்ரான்ஸ்ஃபர் சிஸ்டம்ஸ், ரிஷப் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், ஜிஎஸ்எஸ் இன்ஃபோடெக், போடார் ஹவுசிங் & டெவலப்மென்ட் போன்ற பங்குகளும் சற்று சரிந்து உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த வாரம் காணாத இறக்கம் அடுத்த வாரமும் தொடரலாம் எனவும் இதே போல அடுத்த வாரமும் வர்த்தகம் நடைபெறலாம் என ஒரு சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கூறுகிறார்கள். அதே போல இன்றைய நாளும் வர்த்தகத்தில் பெரிதளவு இறக்கம் இருக்காது என கூறப்படுகிறது.