பாராலிம்பிக் : ஜோதி ஏந்திய ஜாக்கி சான் முதல் டிக்கெட் விற்பனை வரை!

Paralympiques JackieChan

பாரிஸ் : மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நிலையில், துவக்க நிகழ்ச்சியில் தொடர் ஜோதியை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் ஏந்திச் சென்றார். 

பாராலிம்பிக்கில் இந்தியா

கடந்த ஜூலை 25-ஆம் தேதி  நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இந்த போட்டிகளுக்கான இ தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த தொடக்க விழாவை இன்று பாராலிம்பிக் போட்டிகளும் தொடங்கப்படவிருக்கிறது. மொத்தமாக,  11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 184 நாடுகளிலிருந்து 4,400 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர். இந்தியா அணி சார்பாக மொத்தம் 52 ஆண்கள் மற்றும் 32 பெண்கள் என மொத்தம் 84 போட்டியாளர்கள் விளையாடவுள்ளனர்.

மேலும், தொடக்க விழாவில் இந்திய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை சுமித் ஆன்டிலும், பாக்கியஸ்ரீ ஜாதவும் பெற்றனர். கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் சுமித் ஆண்டில் தங்கப்பதக்கமும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பாக்கியஸ்ரீ வெள்ளிப் பதக்கம் வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதியை ஏந்திய ஜாக்கி சான்

பாரிசில் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கலந்துகொண்டு தொடர் ஜோதியை அவர் ஏந்திச்சென்றார். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

Jackie Chan in Paris
Jackie Chan in Paris / @JackieMusique

ஜாக்கி சான் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றாலே அந்த இடம் எவ்வளவு கலகப்பாக இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே, தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரை பார்த்த பலரும் கலகலப்பாக பேசி விளையாடினார்கள்.

டிக்கெட் அமோக விற்பனை

இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை அருமையாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுவரை மொத்தமாக 2 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாகவும்,  கடந்த ஒரு மாதத்தில் 1 மில்லியன் டிக்கெட்கள் விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை போல இன்னமும் இன்னும் கிட்டத்தட்ட 5 லட்சம் அனுமதிச்சீட்டுகள் இருப்பதாகவும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்