“ஆம்., நான் ‘அவர்களுக்கு’ எதிராக பேசினேன்.” மம்தா பரபரப்பு பதிவு.!

West Bengal CM Mamata Banerjee

கொல்கத்தா : பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை நான் மிரட்டியதாக கூறுவது உண்மையல்ல என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி விளக்கமளித்துள்ளார்.

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படாததால், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர்கள் 20 நாட்களை கடந்தும் இன்னும் பணிக்கு திரும்பாமல் போராடி வருகின்றனர்.

மருத்துவர்கள் போராட்டம் நியாயமானது தான். ஆனால் அதனால் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் மருத்துவ பணியாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி ஆகியோர் தொடர்ந்து வலியறுத்தி வருகின்றனர். இருந்தும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது.

இப்படியான சூழலில் பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தும் மருத்துவர்களை அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு மிரட்டியதாக செய்திகள் வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்து மம்தா தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், ” சில செய்தித்தாள்கள், மின்னணு மற்றும் டிஜிட்டல் மீடியாக்களில் தீங்கிழைக்கும் தவறான செய்திகளை நான் கண்டேன். நேற்று எங்கள் மாணவர் அமைப்பு நிகழ்ச்சியில் நான் பேசியதை குறிப்பிட்டு இந்த பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

போராடும் மருத்துவர்களுக்கோ, மாணவர்களுக்கோ எதிராக நான் ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெளிவுபடுத்துகிறேன். அவர்களின் போராட்டத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அவர்களின் போராட்டம் உண்மையானது. சிலர் கூறுவது போல, நான் அவர்களை ஒருபோதும் அச்சுறுத்தவில்லை. இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

நான் பாஜகவுக்கு எதிராக பேசினேன். மத்திய பாஜக அரசின் ஆதரவுடன், நமது மாநிலத்தில் (மேற்கு வங்கத்தில்) ஜனநாயகத்தை அச்சுறுத்தி, அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக நான் பேசியுள்ளேன். மத்திய அரசின் ஆதரவுடன், சட்டவிரோத செயல்களை மாநிலத்தில் உருவாக்க முயற்சிக்கின்றனர், அவர்களுக்கு எதிராக குரல் எழுப்பினேன்.

நேற்றைய எனது உரையில் நான் பயன்படுத்திய சொற்றொடர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச தேவரின் கூறிய சொற்றொடர் என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். எப்போதாவது குரல் எழுப்ப வேண்டும் என்று பழம்பெரும் துறவி கூறியிருந்தார். குற்றங்கள் மற்றும் கிரிமினல் குற்றங்கள் நடக்கும் போது, ​​எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். ” என்று மம்தா பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்