கோலாகலமாக தொடங்கியது பாரா ஒலிம்பிக்! பிரதமர் மோடி வாழ்த்து!

Paralympic Games -PM Modi

பாரிஸ் : ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக இன்று தொடங்கியது.

தற்போது நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

இந்த தொடக்க விழாவில் கலை நிகழ்ச்சிகள், நடனம், சாகசங்கள், பாராலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த தொடக்க விழாவை இன்று பாராலிம்பிக் போட்டிகளும் தொடங்கவுள்ளது மேலும் 11 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் அடுத்த மாதம் 8-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த 17-வது பாராலிம்பிக் தொடரில் மொத்தம் 184 நாடுகளிலிருந்து 4,400 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர். இந்தியா அணி சார்பாக மொத்தம் 52 ஆண்கள் மற்றும் 32 பெண்கள் என மொத்தம் 84 போட்டியாளர்கள் விளையாடவுள்ளனர்.

பாராலிம்பிக் வரலாற்றிலே இந்திய அணி அதிக வீரர்/வீராங்கனைகளுடன் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 6 போட்டியாளர்கள் பேட்மிண்டன் மற்றும் தடகள போட்டிகளில் களமிறங்க இருக்கின்றனர்.

இந்த நிலையில், பாரிஸில் சென்று தங்கள் திறமையை நிரூபிக்கச் சென்றுள்ள இந்தியா வீரர்களை மேற்கொண்டு ஊக்குவிப்பதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் தளத்தில், “பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் எங்கள் அணிக்கு 140 கோடி இந்தியர்கள் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாடும் ஒவ்வொரு விளையாட்டு வீரரின் தைரியமும், உறுதியும் நாட்டின் உத்வேகத்திற்கு ஒரு ஆதாரமாக இருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளரும் தங்களது வெற்றிக்காக வேரூன்றி இருக்கிறார்கள்” என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல இதற்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக் தொடருக்கு முன்னரும் இந்திய வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்