சிறகடிக்க ஆசை- மீனா மீது திரும்பிய பிரச்சனைகள்..அடுத்த மாஸ்டர் பிளான் போடும் விஜயா ரோகினி..!
சென்னை –சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைக்கான எபிசோடில் [ஆகஸ்ட் 28] ரோகிணி விஜயாவிடம் நன்றாக நடித்து நம்ப வைத்து இந்த முறையும் தப்பித்து விட்டார்..
விஜயாவிடம் ரோகினி அழுது கொண்டே தான் சித்தரித்த கதையை சொல்லி அழுகிறாள்.. அப்போது விஜயா கண்ணீர் மல்க ரோகிணி நான் உன்ன சந்தேகப்படலாமா எனக்கு உன்ன பத்தி தெரியும் உனக்கும் மனோஜ்க்கும் குழந்தை பிறக்கும்னு கடவுள் கிட்ட வேண்டிகிட்டே இருக்கேன் ஆனா நீ இந்த விஷயத்தை மறைச்சதுனால எனக்கு கோவம். மனோஜூம் ரோகினிக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாரு ஏன் எல்லாரும் அவளை கஷ்டப்படுத்துறீங்க.. இப்படி யாரு சொன்னது அப்படின்னு விஜயா கிட்ட கேக்க விஜயா அண்ணாமலையை சொல்றாங்க.. அண்ணாமலை முத்துவை சொல்றாங்க.. கடைசியா ரவி ஸ்ருதியை தாண்டி இந்தப் பழி மீனா மேல போய் விழுது.சும்மாவே விஜயாவுக்கு ரோகிணிக்கும் மீனாவ கண்டாலே பிடிக்காது .
இதை கேட்டதும் விஜயா மீனாவை திட்ட ஆரம்பிக்கிறாங்க ..ஏய் என்னடி நெனச்சிட்டு இருக்குற அப்படின்னு கேக்குறாங்க.. ரோகிணியும் என்னோட தனிப்பட்ட விஷயத்தை எல்லார் கிட்டயும் சொல்ல உங்களுக்கு அசிங்கமா இல்லையா அப்படின்னு கேக்குறாங்க.. ஏண்டி இந்த நாரதர் வேலை பார்க்கிற இதுக்குத்தான் இந்த வீட்டுக்கு வந்தியா அப்படின்னு விஜயா கேக்குறாங்க. அத்தை அப்படி எல்லாம் இல்ல ஹாஸ்பிடலுக்கு பூ கொடுக்க போனேன் அங்க இவங்கள பார்த்தேன். அப்பதான் அங்க இருக்கிறவங்க சொன்னாங்க. உடனே ரோகினி எப்படி.. உங்களை தேடி வந்து அவங்களே சொன்னாங்களா.. இல்ல நான் தான் விசாரிச்சேன்னு சொல்றாங்க. உடனே விஜயா அவ என்ன பண்ணுனா உனக்கு என்ன நீ ஏண்டி அவள விசாரிக்கிற இதுதான் உனக்கு கடைசி அப்படின்னு சொல்லிடுறாங்க.
ரோகிணியும் ஆன்ட்டி அழுது நான் பார்த்ததே இல்ல அவங்கள அழ வச்சுட்டீங்கல்ல இனிமே என் விஷயத்துல தலையிடாதீங்க அப்படின்னு சொல்லிடுறாங்க. மீனா கிச்சன்ல நின்னு எப்பவும் போல அழுதுட்டு இருக்காங்க ..முத்து வராரு வந்து சமாதானப்படுத்துறாரு. ஆனாலும் மீனாக்கு ரோகினி மேல ஒரு நெருடல் இருந்துகிட்டே இருக்கு .ரோகிணி எதையும் மறைக்கிறாங்க அப்படின்னு முத்து கிட்ட சொல்றாங்க.. முத்துவுக்கும் அதேதான் தோணுது ஆனா இது நமக்கு தேவை இல்லை மீனானு சொல்கிறார். இப்போ ரோகிணி விஜயா ரூமுக்கு வராங்க ..ரோகினி நீ உன் உடம்ப கொஞ்சம் நல்லா பாத்துக்கமா அப்படின்னா அட்வைஸ் பண்றாங்க. ஆன்ட்டி எனக்கு மெண்டல் பிரஷர் தான் அதிகமா இருக்கு .அப்படி என்னமா உனக்கு கவலை உங்க அப்பா ஜெயில்ல இருக்கிறார் அவ்வளவுதானே மத்தபடி நாங்க எல்லாரும் உன்ன நல்லா தானே பார்த்துக்கிறோம் .அது இல்ல ஆண்ட்டி இந்த வீட்டில எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துட்டே இருக்கு நான் தனியா போகணும் நினைக்கிறேன் அப்படின்னு சொல்றாங்க.
இதுக்கு நீ ஏமா தனியா போற இந்த வீட்டிலே எனக்கு உன்னையும் மனோயையும் தான் ரொம்ப பிடிக்கும் .அந்த மீனாவுக்கு நான் ஒரு வழி பண்ற அவள என்ன பண்றதுன்னு எனக்கு தெரியும். நீ அத பத்தி கவலைப்படாம இரு அப்படின்னு சொல்லி அனுப்பி வைக்கிறாங்க. இப்ப மனோஜ் ரோகினி கிட்ட கலைந்து போன குழந்தையை பத்தி பேசுறாரு. இப்ப அந்த குழந்தை இருந்து இருந்தா குழந்தைக்கு நாம பெயர் வைக்கிறது பத்தி யோசிப்போம்ல அதுல ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருப்போம் ,ஆனா எப்படியோ ரோகினி நம்ம ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு இனிமேல் மெடிக்கல் செக்கப்க்கு எல்லாம் போக வேண்டியது இல்ல அப்படின்னு சொல்றாங்க.. ரோகினி சித்தரிக்கிற ஒவ்வொரு கதையும் அவங்களுக்கு பிரச்சனையாத்தான் போய் முடியுது . ஒரு பொய்யை மறைக்க ரோகிணி அடுத்தடுத்த பொய் சொல்றாங்க இது எங்க போய் முடிய போகுதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.