RIPBijiliRamesh : நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

RIP bijili ramesh

சென்னை :  நடிகர் பிஜிலி ரமேஷ் கல்லீரல் பிரச்னையால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யூடியூப் சேனல்களில்  PRANK வீடியோ மூலம் மக்களுக்கு அறிமுகமாகி அதன் பிறகு, நட்பே துணை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிஜிலி ரமேஷ். இவர் இந்த படத்தை தொடர்ந்து, AI, ஆடை, பொன்மகள் வந்தால், கோமாளி, லக்க்,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர் நடித்த படங்களில் இவருடைய கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும் கூட, இவருடைய நகைச்சுவையான பேச்சு இவருடைய பெயரை வெளியே கொண்டுவந்தது.  குறிப்பாக படங்களில் நடிப்பதற்கு முன்னதாக யூடியூப் சேனல்களில் ‘parnk’ வீடியோக்களில் ரஜினியின் பாபா சிம்பிளை கையில் காட்டி மக்களை சிரிக்க வைத்தவர் என்றே சொல்லலாம்.

இந்நிலையில், இவர் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் வீட்டிலே மருத்துவர்களின் அறிவுரைபடி சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய மனைவியும், கண்ணீர் மல்க என்னுடைய கணவர் உயிர் ஊசலாடுகிறது. தயவு செய்து அவருடைய சிகிச்சைக்காக உதவி செய்யுங்கள் என உதவிகேட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து, குடிப்பழக்கத்தின் விளைவாக ஏற்பட்ட கல்லீரல் பிரச்னையால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆக 28 இரவு சிகிச்சை பலனின்றி காலாமானார். அவருக்கு வயது (46). இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்