அடேங்கப்பா! ‘கோட்’ படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
சென்னை : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படம் கிட்டத்தட்ட 333 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜயின் சினிமா கேரியரில் அதிகமான பட்ஜெட் செலவு செய்த எடுக்கப்பட்ட படம் என்றால் அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ‘லியோ’ படம் தான். இந்த படம் கிட்டத்தட்ட 335 கோடி செலவு செய்து எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படத்திற்குப் பிறகு அதனுடைய அளவிற்குக் கோட் படமும் 300 கோடிக்கு மேல் செலவு செய்த எடுக்கப்பட்ட படம் என்று தெரிய வந்துள்ளது.
கோட் படம் மொத்தமாக 333 கோடியே 15 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் நடிகர் விஜயின் சம்பளம் மட்டும் 200 கோடி பெற்றிருந்ததாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே, பட்ஜெட்டில் 200 கோடி அவருடைய சம்பளத்தில் அடங்கும்.
பட்ஜெட் இவ்வளவு படம் எப்படி வசூல் செய்யும் என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்திருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே படத்தை 416 கோடிக்கு வியாபாரம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இதுவரை 83.10 கோடி லாபம் கிடைத்துள்ளதாம்.
தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமை மட்டும் கிட்டத்தட்ட 76 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் 16கோடிக்கும் , கர்நாடகாவில் 13 கோடிக்கும், ஆந்திரம்/தெலுங்கானாவில் 15 கோடிக்கும், ஹிந்தியில் 15 கோடிகள், மொத்தமாக வெளிநாடுகளில் மட்டும் 70 கோடிகள் என ‘கோட்’ படம் விற்பனை ஆகியுள்ளது.
அதைப்போல, ஆடியோ உரிமைகள் 24 கோடிக்கும்,ஓடிடி உரிமை 112 கோடிகள், சேட்டிலைட் உரிமை 85 கோடி எனப் பிரமாண்ட விலைக்கு விற்பனை ஆகியுள்ளது. வெளியாவதற்கு முன்பே கோட் படம் 416 கோடிக்கு வியாபாரம் செய்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.