தேடி வரும் பதவி? பிசிசிஐ செயலாளராகும் அருண் ஜெட்லீ மகன்? 

Rohan Jaitley with Arun Jaitely

சென்னை : அருண் ஜெட்லீயின் மகனான ரோகன் ஜெட்லீ அடுத்த பிசிசிஐ செயலாளராக பதவியேற்க உள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.

கடந்த 4 வருடங்களாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே ஐசிசியின் தலைவராகச் செயலாற்றி வருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அவரது பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. மேலும்,  கிரெக் பார்கலே இம்முறை தன்னை 3-வது தவணையாக  ஐசிசி தலைவர் பதவிக்கு நியமிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால், அவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் என்பது நடைபெற இருக்கிறது. இந்த செய்தி வெளியானது முதல், தற்போதைய பிசிசிஐயின் செயலாளரான ஜெய்ஷா அடுத்ததாக ஐசிசி தலைவராக நியமிக்கப்படுவார் எனும் தகவல் வெளியாகிப் பரவி வந்தது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவும் இல்லை.

மேலும், ஐசிசி தலைவர் பதவிக்கு ஜெய்ஷா போட்டியிட விரும்பினால் அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும்  அடுத்த மூன்று ஆண்டுகள் ஐசிசி தலைவர் பதவியில் இருப்பார் எனவும் கூறிவருகின்றனர். அதே போல அவர் பிசிசிஐ செயலாளர் பதவியிலிருந்து வெளியேறி விட்டால் அடுத்த செயலாளராக யார் இருப்பார் என ஒரு ஒரு கேள்வியும் அப்போது வைக்கப்பட்டது.

தற்போது, அதற்கென பதிலும் தகவலாகப் பரவி வருகிறது. அடுத்த பிசிசிஐ செயலாளராக அருண் ஜெட்லீ பணியாற்றுவர் எனக் கூறுகிறார்கள். அதாவது ஐசிசி தலைவருக்கான தேர்தலில் ஜெய்ஷா போட்டியிட்டால் பிசிசிஐ செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது விதியாகும்.

இந்நிலையில் தான் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஒருவேளை அடுத்த ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அருண் ஜேட்லியின் மகனான ரோஹன் ஜெட்லி பிசிசிஐ செயலாளர் பொறுப்பை ஏற்பார் என்று கூறப்படுகிறது.  மேலும், கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய்ஷாவைப் போல ரோஹன் ஜெட்லீக்கும் பிசிசிஐ செயலாளர் பதவி என்பது தேடிச் செல்கிறது என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

யார் இந்த ரோஹன் ஜெட்லீ?

மறைந்த முன்னாள் மத்தியமைச்சரான அருண் ஜெட்லீயின் மகன் தான் ரோஹன் ஜெட்லீ. இந்தியாவில் தனது சட்டப்படிப்பையும், கார்னெல் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். இவர் தற்போதைய டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (DDCA) தலைவராகச் செயலாற்றியும் வருகிறார். மேலும், சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் அரசாங்க வழக்கறிஞராக ரோஹன் ஜெட்லியை மத்திய அரசு நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்