அவுட் கொடுத்த நடுவர்…ஆத்திரத்தில் ஹெல்மெட்டை ‘சிக்ஸர்’ விளாசிய பிராத்வைட்!

Carlos Brathwaite

சென்னை : ஆட்டமிழந்த கோபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கார்லோஸ் பிராத்வைட் ஹெல்மெட்டை கழற்றி பூங்காவிற்கு வெளியே அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Max60 Caribbean 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிஃபையர் 1 போட்டியில் ப்ராத்வைட்டின் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் கிராண்ட் கேமன் ஜாகுவார்ஸ் அணிகளும் மோதியது. இந்த போட்டியின் போது பேட்டிங் செய்ய வந்த கார்லோஸ் பிராத்வைட் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கார்லோஸ் பிராத்வைட் அடித்த அந்த பந்து கேட்ச் ஆவதற்கு முன்னதாக அவருடைய தோள்பட்டையில் பட்டது. பேட்டில் பந்து படவே இல்லை. ஆனால், அதனைக் கவனிக்காமல் போட்டியின் நடுவர் தனது கைகளை உயர்த்தி அவுட் என சிக்னல் கொடுத்துவிட்டார். இதனால் கடுப்பான பிராத்வைட் நடுவரைப் பார்த்துக்கொண்டு தலையைக் கீழே தொங்கபோட்டு அப்படியே  பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, ‘பந்து பேட்டில் படவில்லை ஆனால், எதற்கு அவுட் கொடுத்தார்கள்’ என யோசித்து கொண்டே பிராத்வைட் சென்ற நிலையில் திடீரென வேகமாகத் தனது ஹெல்மெட்டை கழற்றி கையில் வைத்திருந்த பேட்டை வைத்து ஆக்ரோஷமாக மைதானத்தில் இருந்து  வெளியே அடித்தார். பிறகு கையில் இருந்த பேட்டையும் தூக்கி எறிந்தார்.

இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருடைய கோபம் நியாயமானது தான் எனவும், இது அவுட்டே இல்லை எதற்காக அவுட் கொடுத்தார்கள் எனவும் கூறி வருகிறார்கள். மேலும், யூயோர்க் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் கிராண்ட் கேமன் ஜாகுவார்ஸ் அணிகள் மோதிக்கொண்ட இந்த போட்டியில் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் கிராண்ட் அணி கேமன் ஜாகுவார்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து Max60 கேமன் தீவுகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்